தற்போதைய செய்திகள்

கழகத்தின் வெற்றி தொடரும் : கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பேட்டி

காஞ்சிபுரம்:-

உள்ளாட்சித் தேர்தலிலும் கழகத்தின் வெற்றி தொடரும் என்று கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி கூறினார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினர் கோவிலம்பாக்கம் ஜெ.டி.மகாலில் விருப்ப மனு அளித்தனர். அப்போது கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மிக உற்சாகமாகவும் எழுச்சியுடனும் கழகத் தொண்டர்கள் ஆர்வமாக விருப்ப மனு அளிக்க வருவதை காணும்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியினை பெறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.வெற்றிடம் என்று சொல்கிறார்கள். ஒரு கட்சிக்கு தலைவரே இல்லாமல் இருந்தால்தான் அது வெற்றிடம். இது கூட தெரியாமல் அவர்கள் இருக்கிறார்கள்.

இதயதெய்வம் அம்மாவின் மறைவிற்கு பின்பு கழகத்திற்கு, இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப் பாளர்கள் உள்ளனர். அப்படியிருக்க எப்படி வெற்றிடம் என்ற வார்த்தையே அவர்களால் சொல்ல முடியும். வெற்றிடம் என்றால் ஒரு கட்சிக்கு தலைவரே இல்லாமல் இருந்தால்தான் அதற்கு பெயர் வெற்றிடம் என்பதாகும். மேலும் எதிர்க்கட்சிகளின் பொய்பிரச்சாரங்களை முறியடித்து விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் கழகம் மாபெரும் வெற்றியினை பெற்றுள்ளது. இந்த வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.

இவ்வாறு கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி கூறினார்.