சிறப்பு செய்திகள்

முதலமைச்சரை நேரில் சந்தித்து புதிய மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து பெற்றனர்.

சென்னை

சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்தபடி விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு புதிய மாவட்டமாகவும், நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட தென்காசி புதிய மாவட்டமாகவும் உருவாகியுள்ளது.

அதேபோல் வேலூர் தொகுதி மக்களவை தேர்தலின்போது அறிவிக்கப்பட்டபடி வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து 5 மாவட்டங்களுக்கும் புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேபோல் புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.