விருதுநகர்

மக்கள் ஆதரவாக இருப்பதால் கழகத்தின் வெற்றி தொடரும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி.

விருதுநகர்

மக்கள் ஆதரவாக இருப்பதால் கழகத்தின் வெற்றி தொடரும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நகரம், ஒன்றியம், பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மன் எம்.எல்.ஏ., சந்திரபிரபா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

திருவிழா நேரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி பிடிக்கும். திருவிழா முடிந்து அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் அதே போன்று கழகத்தில் இருந்த பிரிந்து சென்றவர்கள் தற்போது தாய் கழகத்தில் இணைந்துள்ளனர். இன்னும் சிலர் விரைவில் வர உள்ளனர். கழகத்தில் பிரிவு ஏற்படுவது போன்ற தோற்றம் தெரியும். ஆனால் வலுவாகத்தான் இருக்கும்.

தமிழகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அம்மாவின் வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். அதனுடைய வெளிப்பாடுதான் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி வெற்றி. மக்களால் ஏற்றுக் கொள்ளபட்ட, மக்களின் பேராதரவை பெற்ற இயக்கம் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். மக்கள் நமக்கு ஆதரவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளையும் கழக வேட்பாளர்கள் கைப்பற்றுவார்கள்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் கழக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்றார்கள். அதே வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். அஇஅதிமுக மனிதன் ஆரம்பித்த கட்சி இல்லை. புனிதன் ஆரம்பித்த கட்சி. இந்த கட்சியை எவராலும் அழிக்க முடியாது. விதைத்தவர்கள் உறங்கி கொண்டு இருக்கின்றனர். ஆனால் விதைகள் நாம் உறங்கவில்லை. எந்த தேர்தல் வந்தாலும் அனைத்து தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், செயற்குழு உறுப்பினர் சகதிகோதண்டம், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சிந்துமுருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, தெற்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் மீரா தனலட்சுமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன்னு பாண்டியன், , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகையா பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், முன்னாள் நகர செயலாளர் முத்துராஜ், வத்ராப் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்புராஜ், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சேதுராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.