திருவள்ளூர்

உள்ளாட்சித் தேர்தலில் கழக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் பா.பென்ஜமின் உறுதி

திருவள்ளூர்

உள்ளாட்சித் தேர்தலில் கழக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

மதுரவாயலில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மதுரவாயல் பகுதி கழக செயலாளரும், ஊரக தொழில் துறை அமைச்சருமான பா.பென்ஜமின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி. அலெக்சாண்டர், சென்னை கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி மற்றும் மாவட்ட கழக அவைத்தலைவர் காசு ஜனார்த்தனம், ஒன்றிய கழக செயலாளர் ராஜா என்கிற பேரழகன், வட்ட செயலாளர்கள் மதுரவாயல் ஏ.தேவதாஸ், எம்.பி. தென்றல்குமார், என்.டி.சத்திய நாதன், என்.எம்.இம்மானுவேல் சந்திரசேகரன், வீடியோ கோபு, தாமோதரன்,
உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முதியோர் தொகை பெற வருமான வரம்பு ரூ.50 ஆயிரமாக இருந்ததை ரூ.1 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மக்களின் மீது அக்கறை கொண்ட அரசாக அம்மாவின் வழியில் வரும் எடப்பாடியாரின் அரசு திகழ்கிறது. உலகத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்குவதுடன் உள்ளங்கையில் உலகத்தை தெரிவிக்கும் லேப்-டாப் வழங்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டுமே, அதேபோன்று கர்ப்ப காலம் மூன்று கட்டங்களாக மாதம் 6000 ரூபாய் அம்மாவின் அரசு அவர்களுக்கு வழங்குகிறது.

குழந்தை கருவிலிருக்கும் போதே நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் அம்மா அவர்கள். அந்த குழந்தை பிறந்தவுடன் தாய்மாமன் வீட்டு சீர் வருவதற்கு முன்பாகவே கழக அரசின் சீர் மருத்துவமனைக்கு சென்று விடுகிறது. அம்மாவின் அனைத்து திட்டங்களும் அம்மாவின் மறைவிற்கு பிறகு செயல்படுமா? செயல்படாதா? என்று எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பினார்கள். ஆனால் அதனை பல மடங்கு சீரும், சிறப்புமாக செய்து வருகிறது கழக அரசு.

தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. அதற்கு அடித்தளமிட்டவர் அம்மா அவர்கள். அம்மாவின் நலத்திட்டங்களை கழக அரசு வாரி வழங்கிக் கொண்டிருக்கும். நீங்கள் அதை பெற்றுக் கொண்டே இருங்கள். இதற்கு முடிவு என்பதே இல்லை.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பா.பென்ஜமின், தமிழக மக்கள் மீதும், அவர்களின் நலன் மீது அக்கறை கொண்ட அரசாக அம்மாவின் வழியில் வரும் எடப்பாடியார் அரசு திகழ்வதால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.