சிறப்பு செய்திகள்

திருப்­பத்தூர்,ராணிப்­பேட்டை மாவட்­டங்­கள் உதயம் – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை:-

மேலும் புதி­தாக உத­யமா­கும் திருப்­பத்தூர் மற்றும் ராணிப்­பேட்டை மாவட்டங்­களை முதலமைச்சர் எடப்­பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்­வம் மற்றும் அமைச்­சர்­கள் பங்­கேற்கின்­ற­னர்.

நிர்வாக வசதியை கருத்தில் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம், திருநெல்வேலியை இரண்டாக பிரித்து தென்காசி நகரை தலைமையிடமாக கொண்டு தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதேபோல் வேலூர் மாவட்­டத்தை 3– ஆக பிரித்து திருப்­பத்தூர், ராணிப்­பேட்டை ஆகிய புதிய மாவட்­டங்­கள் ஏற்­படுத்­தப்­படும் என சுதந்­திர தின விழா உரை­யில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்­தார்.

அதன்படி கடந்த 22-ந்தேதி அன்று தென்காசியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தென்காசி புதிய மாவட்டத்தையும், 26-ந்தேதி அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, ெபாங்கல் தொகுப்புடன் ரூ.1000 பரிசுத்தொகை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்.

திருப்­பத்தூர் மாவட்­டம் 1797.92 சதுர கி.மீட்­டர் பரப்­ப­ள­வு­டன் 11 லட்­சத்து 11 ஆயி­ரத்து 812 மக்­கள் தொகை கொண்­டது. திருப்பத்தூர், வாணியம்­பாடி வருவாய் கோட்­டங்­க­ளு­டன் திருப்­பத்தூர், வாணியம்­பாடி, நாட்றம்­பள்ளி, ஆம்பூர் வரு­வாய் வட்டங்கள், 15 வரு­வாய் உள் ­வட்­டங்­கள் 195 வருவாய் கிரா­மங்­கள், 207 கிராம ஊராட்­சிகளை உள்­ள­டக்கியுள்­ளது.

ராணிப்­பேட்டை ராணிப்பேட்டை மாவட்­டம் 2234.32 சதுர கி.மீட்­டர் பரப்­ப­ள­வு­டன் 12 லட்­சத்து 10 ஆயி­ரத்து 277 மக்­கள் தொகை கொண்­டது. ராணிப்பேட்டை, அரக்­கோ­ணம் வருவாய் கோட்டங்­க­ளு­டன் வாலாஜா, ஆற்­காடு நெமிலி, அரக்­கோ­ணம் வருவாய் வட்டங்கள், 18 வருவாய் உள்­வட்­டங்­கள், 330 வருவாய் கிரா­மங்­க­ளு­டன் 288 கிராம ஊராட்­சிகள் இடம் பெற்­றுள்­ளன. வேலூர் மாவட்­டத்தில் குடியாத்­தம் வருவாய் கோட்­டமும் கே.வி.குப்பம் என்ற புதிய வருவாய் வட்­டமும் ஏற்­படுத்­தப்­படுகிறது.

திருப்­பத்தூர் மாவட்­டத்­தின் தொடக்க விழா, திருப்பத்தூர் டான்­போஸ்கோ மெட்­ரிக் மேல்நிலைப்பள்ளி வளா­கத்தில் இன்று 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடை­பெற உள்­ளது. ராணிப்பேட்டை மாவட்­டத்தின் தொடக்க விழா, ராணிப்­பேட்டை கால்­நடை நோய்த் தடுப்பு மருந்து நிலைய வளா­கத்­தில் இன்று 28-ந்தேதி பிற்­பகல் 12.30 மணிக்கு நடை­பெற உள்­ளது. 2 புதிய மாவட்­டங்­களை முதலமைச்சர் எடப்­பாடி கே.பழனி­சாமி தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உத­வி­களை வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்­செல்­வம், அமைச்­சர்­கள் ஆர்.பி.உத­யகுமார், கே.சி.வீர­மணி, நிலோ­பர்கபீல், தலைமை செய­லாளர் சண்முகம், வருவாய்த்துறை கூடு­தல் தலைமை செய­லா­ளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்­டோர் பங்­கேற்க உள்­ள­னர்.