சிறப்பு செய்திகள்

தேனி சுருளி சாரல் விழாவில் 551 பேருக்கு நலத்திட்ட உதவி – துணை முதலமைச்சர் வழங்கினார்

தேனி

தேனி சுருளி சாரல் விழாவில் 551 பேருக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சுருளி சாரல் விழா-2019 தொடக்க விழா நேற்று நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 61 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, 46 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.25,000 வீதம் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை, 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.38.20 லட்சம் நிதியுதவி, 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.1.60 லட்சம் சுழல் நிதி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.2,10,000 வீதம் ரூ.105.00 லட்சம் மதிப்பிலான வீடு கட்டுவதற்கான ஆணைகள் ஆகியவற்றை வழங்கினர். விழாவில் மொத்தம் 551 பயனாளிகளுக்கு ரூ.380.82 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும், அதன் மூலம் தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அம்மா அவர்களது அரசு ஒவ்ெவாரு ஆண்டும், முக்கியமான சுற்றுலா தலங்களில் அரசு சார்பில் விழா நடத்தி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அந்த அடிப்படையில் அம்மா அவர்களது அரசு இட்ட ஆணைப்படி, தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுருளி சாரல் விழா மிக சிறப்புடன் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டம் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களின் முகத்துவாரமாக அமைந்துள்ளது. இங்கு வைகை அணை, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, சின்ன சுருளி அருவி, இரைச்சல் பால அருவி, புலி அருவி, கம்பம் பள்ளதாக்கு, மேகமலை, வெள்ளிமலை, டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை முகடு, மீசுவாபுலி மலை முகடு, ஆகிய இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளும்,

அம்மா அவர்களின் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் பொருட்டு ரூபாய் 1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்தாண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய மூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ேபசினார்.