தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 3ம் தேதி திறக்கப்படும் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2ம் தேதிக்கு பதிலாக 3ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி 9 மாவட்டங்கள் தவிர இதர 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் ஜனவரி இரண்டாம் தேதி திறக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி 2ம் தேதிக்கு பதிலாக 3ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.