தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் விலையில்லாமல் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் – அமைச்சர் பா.பென்ஜமின் பெருமிதம்

திருவள்ளூர்

பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் விலையில்லாமல் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று அமைச்சர் பா.பென்ஜமின் பெருமிதத்துடன் கூறினார்.

கழக அரசால் இன்று மருத்துவத்துறையில் தமிழகம் ஆசிய கண்டத்திலேயே சிறந்து விளங்குகிறது என்று நெற்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் பெருமிதத்துடன் கூறினார்அம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவுநாளையொட்டி மதுரவாயல் சட்டமன்ற தொகுதி 145-வது வார்டில் வட்ட கழக செயலாளர் நெற்குன்றம் டி.சத்தியநாதன் ஏற்பாட்டில் அங்குள்ள பள்ளியில் மருத்துவமுகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை மதுரவாயல் பகுதி கழக செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான பா.பென்ஜமின் துவக்கி வைத்து பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே இப்படி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மருத்துவ முகாம்களை நடத்துகிறது. இதன்மூலம் மக்கள் பயன் பெறுகிறார்கள். இன்று மக்களை பற்றியே சிந்தித்து மக்களுக்காகவே பல திட்டங்களை தீட்டியவர் அம்மா அவர்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் மகன் மகள் ஆகியோரால் கைவிடப்பட்டவர்களுக்கும் ரூபாய் 1000 ஓய்வூதியம் திட்டத்தை அம்மா அவர்கள் வழங்கினார்.

நித்தமும் பெண்களைப் பற்றியே, அவர்களையே நினைத்து திட்டங்கள் வழங்கிய அம்மா அவர்கள் பேன், மிக்ஸி ,கிரைண்டர் என்று அனைத்தையும் வாரி வழங்கினார். அம்மாவின் வழியில் இன்று தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகையை விரிவுபடுத்தும் விதமாக 5 லட்சம் பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு சரியான பயனாளிகளுக்கு இன்று முதியோர் தொகை வழங்கப்படும் நிலையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த முதியோர் தொகை பெற மாத வருமானம் ரூபாய் 50,000 என்பதை திருத்தி இன்று குறைந்தபட்ச வருமானம் ரூ. 1 லட்சம் இருந்தாலும் அந்த பயனாளிகளின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் பயன்பெறும் வகையில் கழக அரசு செயல்படுகிறது.

மக்களுக்காகவே சிந்திக்கும் அரசு, மக்களின் மீது அக்கறை கொண்ட அரசாக அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்தமுறை அம்மா இருக்கும் போது பொங்கல் தொகுப்பாக கரும்பு. சர்க்கரை. வெள்ளம் ஆகிய தொகுப்பை மக்களுக்கு வழங்கினார். அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு இந்த பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாயும் சேர்த்து உத்தரவிட்டதன் எதிரொலியாக கடந்த ஆண்டு மக்கள் பொங்கல் திருநாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். அதேபோன்று இந்த ஆண்டும் அதனை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

மக்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு அவற்றை அம்மாவின் அரசு நிறைவேற்றி தெரிகிறது. பெண்களுக்காகவே சிந்தித்து பெண்களைப் பற்றி நினைத்து வாழ்ந்த ஒரு முதலமைச்சர் யார் என்றால் அம்மா அவர்கள் தான். இதேபோன்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட அவர்கள் கூறியது போல ஆண்டுதோறும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தாய்மார்கள் சிந்திக்க வேண்டும் உங்கள் மீது அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு திகழ்கிறது. இதேபோன்று கடந்த கழக ஆட்சியில் தாலிக்கு வழங்கப்பட்டிருந்த தங்கம் 4 கிராம் அம்மா அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தது போன்று இன்று 8 கிராம் ஆக உயர்த்தி அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடியார் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்குகிறார்கள்.

கழக அரசின் மீது தேவையற்ற வீண் வதந்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன. அம்மாவின் அரசு பள்ளி மாணவ மாணவிகளை இடைநிற்றல் தவிர்க்கும் பொருட்டு அவர்களுக்கு பேனா, பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ்‘, காலனி என பதினான்கு வகையான உபகரணங்களை வழங்கி இன்று தமிழகத்தில் ஆண்டுதோறும் கல்வியில் தேர்ச்சி விகிதமும் சேர்க்கை விகிதம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. உலகத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்குவதுடன் உள்ளங்கையில் உலகத்தை தெரிவிக்கும் லேப்-டாப் வழங்கும் ஒரே அரசு அம்மாவின் வழியில் வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மட்டுமே.

அதேபோன்று தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது மூன்று கட்டங்களாக மாதம் 6000 ரூபாயை அம்மாவின் அரசு வழங்குகிறது. குழந்தை கருவிலிருக்கும் போதே நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் அம்மா அவர்கள். அந்தக் குழந்தை பிறந்தவுடன் சோப்பு, ஷாம்பூ கண்ணாடி, கிளுகிளுப்பு சூரணம் கியம் என 16 வகையான கிப்ட் பாக்ஸ் வழங்குவதன் மூலம் அம்மாவின் அரசில் அந்த குழந்தைக்கு தாய்மாமன் வீட்டு சீர் வருவதற்கு முன்பாகவே கழக அரசின் சீர் மருத்துவமனைக்கு சென்று விடுகிறது.

அம்மாவின் அனைத்து திட்டங்களும் அம்மாவின் மறைவிற்குப் பிறகு செயல்படுமா? செயல்படாதா? என்று எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பினார்கள். ஆனால் அதனை விட பலமடங்கு திட்டங்களை சீரும், சிறப்புமாக செய்து வருகிறது கழக அரசு. கழக அரசால் இன்று மருத்துவத்துறையில் ஆசிய கண்டத்திலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதற்கு அடித்தளமிட்டவர் அம்மா அவர்கள். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் அம்மாவின் நலத்திட்டங்களை அம்மா அவர்களின் நல் ஆசியுடன் கழக அரசு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, வட்ட கழக செயலாளர் மதுரவாயல் ஏ.தேவதாஸ் உட்பட பலர் உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 145-வது வட்ட கழக செயலாளர் நெற்குன்றம் டி.சத்தியநாதன் செய்திருந்தார்.