தமிழகம்

உள்ளாட்சி தேர்தல், முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஒய்ந்தது

சென்னை:-

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

புதிய மாவட்டங்கள் பிரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சென்னை உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது.முதல் கட்டமாக 91 ஆயிரம் ஊரக உள்ளாட்சி பதவி இடங்களுக்கு வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் வீடு, வீடாக சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில், முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஒய்ந்தது.