தற்போதைய செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடு – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் நேரில் ஆய்வு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கு அரசு மருத்துவமனைகளில் செய்ய்பட்டுள்ள முன்னேற்பாடு வசதிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர்கபில் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட தீவிர முன்னெச்சரிக்கை தொடர் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஆணையின்படியும்” சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் சுகாதாரத்துறை, மருத்துவதுறை வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்தநாள் வரையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எந்த ஒரு நபருக்கும் இல்லை இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கட்டடங்கள், தொண்டு நிறுவனங்களின் கட்டடங்களில் சிகிச்சைகளை அளிக்க தற்காலிக தனிமைப்படுத்தப் பட்ட வார்டுகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர்கபில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தனர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் சுமார் 100 படுக்கைகள் அமைத்து தயார் நிலையில் உள்ளதையும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் சுமார் 50 படுக்கைகள் அமைத்து தயார் நிலையில் உள்ளதையும், நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் சுமார் 80 படுக்கைகள் அமைத்து தயார் நிலையில் உள்ளதையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு வார்டுகள் அமைக்கும் பணிகள் குறித்தும் மருத்துவர்கள் வட்டாட்சியர்கள், அமைச்சர்களிடம் தெரிவித்தனர். மேலும் தனிவார்டுகளுக்கு தனியார் தோல் தொழிற்சாலை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களிடமிருந்து மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், ஆகியவற்றை அமைத்து கொடுத்திட கோரிக்கை வைத்து பெற்றிட வேண்டும் எனவும் மருத்துவ உபகரணங்கள் ஒவ்வொன்றாக தேவைக்களுக்கேற்ப விரைவாக அரசிடம் பெற்றிடவும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் சுகாதாரத்துறை வருவாய்த்துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து நாட்றாம்பள்ளியில் நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்து வந்த உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தின் சாலை ஓரங்களில் இயங்கி வந்த காய்கறி விற்பனை கடைகள் உழவர்சந்தையில் இயங்கி வருவதை அமைச்சர் கே.சி.மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்விற்கு பின் நாட்றம்பள்ளி கருணாநிதி நகரில் தமிழக அரசின் கொனோரா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மஸ்கட் நாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பி வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ள பெருமாள் என்பவரின் வீட்டிற்கு சென்று அமைச்சர் கே.சி.வீரமணி நேரடியாக சந்தித்து அந்த நபரிடம் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் எனவும் அரசு உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாக்கும் செயலாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என அறிவுரை வழங்கினார்.

அவருடைய குடும்பத்தாரிடமும் நீங்கள் அனைவரும் அவரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் குடும்பத்தில் யாருக்கும் எவ்வித உடல் உபாதைகள் இருந்தாலும் உடனடியாக உங்களை கண்காணிக்கும் மருத்துவர்களிடம் தெரிவித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், ஆம்பூர் சர்க்கரை ஆலைத்தலைவர் மதியழகன், ஆம்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஷர்மிளாதேவி, வட்டாட்சியர்கள் செண்பகவள்ளி, சிவப்பிரகாஷம், உமாரம்யா மற்றும் பலர் உடனிருந்தனர்.