சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

ஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

“31.3.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் (30.3.2020) கலந்தாய்வு செய்த பின்னர், இன்று நான் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவினை பிறப்பிக்கின்றேன்:

“31.3.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.”

உலகெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொது நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.