தற்போதைய செய்திகள்

வரலாறு காணாத தோல்வியே திமுகவுக்கு பரிசாக கிடைக்கும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

சாத்தூர்

உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை திமுகவுக்கு பரிசாக கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறும்போது:-

உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெறவுள்ளது. திமுக மற்றும் அங்குள்ள கூட்டணி கட்சிகளுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலி்ல் மரண அடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்க உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வாக்காளர்கள் தயாராகிவிட்டனர்.

எடப்பாடியார் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க உள்ளனர். தமிழகம் முழுவதிலும் திமுக கூட்டணி வரலாறு காணாத தோல்வியை இந்த உள்ளாட்சித் தேர்தலில் சந்திக்க உள்ளது. ஒரு எளிமையான முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி திகழ்கின்றார். தமிழ்நாட்டுக்கு ஒரு பாதுகாப்பான முதலமைச்சர் திகழ்வதால் கழக ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.

எம்பி தேர்தலில் மக்கள் எடுத்த நிலைப்பாடு மாறி நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றியை பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் மனநிலை முற்றிலும் கழகத்திற்கு ஆதரவாக மாறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் கழகத்தின் கோட்டையாக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை கழக வேட்பாளர்கள் பெறுவார்கள். ஒவ்வொரு கிராமங்களுக்கும் நாங்கள் வாக்கு சேகரிக்க சென்றபோது வாக்காளர்கள் எங்களை உற்சாகமாக வரவேற்று கொடுத்ததிலிருந்து எங்களது வெற்றி உறுதி என்பது உறுதியாகிவிட்டது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.