சிறப்பு செய்திகள்

வணக்கம் உங்கள் முதலமைச்சர் பேசுகிறேன்

சென்னை 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசும்
விழிப்புணர்வு ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆடியோவில், ‘வணக்கம் உங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன்.

உலகெங்கும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸை ஒழிக்க அதிகமு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எனவே, கரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள விழித்திருங்கள், விலகியிருங்கள், வீட்டிலேயே
இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசியுள்ளார். இந்த ஆடியோ வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.