தமிழகம்

ரூ.1,000 நிவாரணம் வேண்டாமா?

சென்னை

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

நிவாரண உதவி

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 02.04.2020 முதல் கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை ரூ.1000/- மற்றும் விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விருப்பம் இல்லையா

தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்த நிவாரண உதவித் தொகை மற்றும் விலையில்லாப் பொருட்கள் தற்போது பெற விருப்பமில்லாதவர்கள் இதற்கான வலைதளமான tnpds.gov.in என்ற முகவரி மற்றும் tnepds. செயலியிலும் சென்று உதவித் தொகை ரூ.1000/- அல்லது விலையில்லாப் பொருட்கள் மட்டும் அல்லது இரண்டும் இந்த மாதம் மட்டும் விட்டுக்கொடுக்கும் தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி தெரிவிக்கும் அரசு

இவ்வாறு விட்டுக்கொடுப்பது ஏப்ரல் மாதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விட்டுக்கொடுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.