தற்போதைய செய்திகள்

தீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை

தீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர்அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டடத்தில் தீயணைப்புத்துறையின் ஸ்கே லிப்ட் மூலம் கிருமி நாசினி பணியை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தமிழக முதலமைச்சர் நல்லஆலோசனைகளை, உத்தரவுகளை வழங்கி வருகிறார். முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மிகச்சிறப்பாக தமிழ்நாடு முழுவதும், கிருமி நாசினியை தெளித்து வருகிறார்கள்.

குறிப்பாக மக்கள் அதிகம் கூடக்கூடிய கோயம்பேடு வணிக வளாகம், சந்தைகளில் மிகச்சரியான பணியை செய்து வருகிறார்கள். தீயணைப்புத்துறை துறையின் சார்பில் இன்றைக்கு ராயப்பேட்டை, ஏற்கனவே பாசிட்டிவ் கேஸ் இருக்கக்கூடிய ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, 8 மாடி கொண்டுள்ள அரசு ஓமந்தூரார் மருத்துவமனை போன்ற இடங்களில் ஸ்கை லிப்ட் எனக்கூடிய அதிநவீன வாகனங்களை ஒட்டுமொத்தமாக பயன்படுத்தி கிருமிநாசினியை அடித்துள்ளார்கள்.

மருத்துவமனையில் பாசிட்டிவ் கேஸ் இருப்பதால் அங்கிருந் துயாருக்கும் நோய் தொற்று ஏற்படக்கூடாது என்று அரசு மிகுந்த கவனமாக இருக்கிறது அந்த வகையில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் தமிழ்நாடு முழுக்க 4500 இடங்களில் போர்க்கால அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற பணியை வல்லரசு நாடுகளில் தான் நாம் பார்த்திருப்போம். இதுபோலத் தான் முதலமைச்சர் செய்ய அறிவுறுத்தினார். முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று முழுமையாக கிரிமிநாசினியை தெளிக்கிறோம். பல நாட்கள், பல மனிதர்களால் செய்ய வேண்டிய பணியை 1 மணி நேரத்தில் ஒட்டுமொத்த கட்டடங்களில் தெளித்து விடுகிறார்கள்.

இதுமிகப்பெரிய பணி. இதுபோன்ற தொடர் நடவடிக்கையின் காரணமாகத் தான்நடவடிக்கைக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். குறிப்பாக நோய் தொற்று இருக்கும் என்ற அடிப்படையில் அந்த இடத்தை தேர்வு செய்து இந்த பணியை மேற்கொள்கிறார்கள். இந்த பணி எங்களுக்கு மிகுந்த உதவியாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் விழிப்புணர்வு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தீயணைப்புத்துறை செய்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.