தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு

சென்னை

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனை குறித்த விபரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சில தனியார் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து, அங்கு கொரோனாவுக்கான சிகிச்சை பெற மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சேலையூர் பரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை, மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவூர் மாதா மருத்துவமனை, எனாத்தூர் மீனாட்சி மருத்துவமனை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை, பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனை, தண்டலம் சவீதா மருத்துவமனை,

அம்மாபேட்டை ஸ்ரீசத்யசாய் மருத்துவமனை, குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவமனை, மாங்காடு ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவமனை, காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம்.மருத்துவமனை, ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவமனை, கேளம்பாக்கம் செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, குரோம்பேட்டை டாக்டர் ரெலா மருத்துவமையம் மற்றும் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ்.மருத்துவமனை,

டாக்டர் மேத்தா மருத்துவமனை, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை, ஆகாஷ் மருத்துவமனை, அயனம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனை, சென்னை சி.எஸ்.ஐ. கல்யாணி பொது மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, மணப்பாக்கம் மியாட் மருத்துவமனை,

வடபழனி விஜயா மருத்துவமனை, பெருங்குடி ஜெம் மருத்துவமனை, பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.