தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெற செய்வீர் – அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள்

ஈரோடு

கழக கூட்டணி வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெற செய்வீர் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியம் குருப்ப நாய்க்கன்பாளையம் ஊராட்சி, ராணாநகர், வரதநல்லூர் ஊராட்சி, சன்னியாசிப்பட்டி, ஜல்லிக்கல்மேடு, மூன்ரோடு பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழகம் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் ரவுடியிசம், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து என தமிழக மக்கள் வேதனையில் வாழ்ந்தனர். அம்மா ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது. ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது.

ஊழலுக்காக செயல்படும் கட்சி தி.மு.க.. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றியது. பின்னர் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு மக்கள் படுதோல்வியை பரிசாக அளித்தனர். உள்ளாட்சியில் நல்லாட்சி நடைபெற கழக அரசுக்கு நல்லாதரவு வழங்குங்கள். அம்மாவின் நலத்திட்டங்கள் இல்லாத வீடே இல்லை. வீடு தோறும் நலத்திட்டங்களை வழங்கி வரும் அம்மாவின் அரசுக்கு நல்லாதரவு தந்து கழகம் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை மாபெரும் வெற்றியடைய செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பவானி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கே.கே.விஸ்வநாதன், நிலவள வங்கி தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், வழக்கறிஞர் வரதராஜ், ராஜேந்திரன், வாத்தியார் குப்புசாமி, தட்சிணாமூர்த்தி, அரசு வழக்கறிஞர் அருள் முருகன், வரத நல்லூர் சிவபெருமாள், ஹேமலதா ராஜா, எம்.ஜி.நாத் (எ) மாதையன், கராத்தே பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.