ராமநாதபுரம்

உண்மையான தொண்டர்களுக்கு கழகத்தில் மட்டுமே முன்னுரிமை – ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேச்சு…

ராமநாதபுரம்:-

உண்மையான தொண்டர்களுக்கு கழகத்தில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை க்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய,நகர,பேரூர் கழக,கிளைக்கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

அ.ம.மு.க என்பது கொள்கை இல்லாத கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். தவறான வழிகாட்டுதலின் பேரில் சிலர் சென்றனர். சென்றவர்கள் எல்லோரும் கழகம் தான் நமக்கு சரியான பாதுகாப்பு இயக்கம் என நம்பி திரும்பி வந்துள்ளனர். டி.டிவி தினகரன் ஒரு செல்லாக்காசு அவரை நம்பி சென்றவர்களின் நிலைமை பரிதாபமானது. நமது இயக்கத்தில் மூத்த உறுப்பினர் களுக்கும், உண்மை தொண்டர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். கழக நிர்வாகிகள் அனைவரும் பிரிந்து சென்றவர்களை அரவணைத்து கொண்டு அழைத்து வர வேண்டும்.

புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைக்க வேண்டும்.இளைஞர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இயக்கம் என்று சொன்னால் அது கழகம் தான். திசை மாறி சென்றவர்கள் மீண்டும் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும். அனைவரும் கழகத்தை முதல்வர் மற்றும் துணை முதல்வர் நல்வழியில் வழி நடத்தி செல்ல வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும், இதயதெய்வம் அம்மாவின் சேவைகளையும் நமது மக்களிடம் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.