ராமநாதபுரம்

உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலினின் சதித்திட்டங்களை முறியடித்து கழக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் – ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி உறுதி

ராமநாதபுரம்

உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலினின் சதித்திட்டங்களை முறியடித்து கழக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக நிர்வாகிகளிடம் கலந்தாய்வு கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் தமிழகத்தில் ஒரு மகத்தான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கழகத்திற்கு மகத்தான வெற்றியை பெற்று தந்து சாதனை படைத்துள்ளனர். கழக ஆட்சிக்கு மக்களிடையே நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் கழக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 170 ஒன்றிய கவுன்சிலர் தேர்தல், 17 மாவட்ட கவுன்சிலர் தேர்தல், 429 ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் ஆகியவை நடைபெறுகிறது. இதில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும். எனவே கழக நிர்வாகிகள் இப்போதிருந்தே கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். அப்படி செய்தால் நாம் மகத்தான வெற்றி பெறுவோம். மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். ஸ்டாலின் எத்தனை சதித்திட்டங்கள் செய்தாலும் அதனை அம்மாவின் அரசு முறியடித்து நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும். கழக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, நாகநாதன், காளிமுத்து, முனியசாமி பாண்டியன், மதிவாணன், அசோக், நந்திவர்மன், நகர செயலாளர்கள் அங்குசாமி, கணேசன் மற்றும் நகர அம்மா பேரவை செயலாளர் வடமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.