தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டனர் – அமைச்சர் பா.பென்ஜமின் பேட்டி

திருவள்ளூர்

தி.மு.க.வுக்கு புத்தாண்டு பரிசாக தோல்வியை தருவதற்கும், இந்த உள்ளாட்சித் தேர்தலோடு தி.மு.க.வுக்கு முடிவுரை எழுதவும் மக்கள் தயாராகி விட்டனர் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்தார்.

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒன்றிய கழக செயலாளர் ராஜா என்கிற பேரழகன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சசிகலா மகேஷ், வானகரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கீதாலஷ்மி சங்கர், அடையாளம்பட்டு ஊரட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் செல்வி சரவணன், ஆகியோரை ஆதரித்து ஊரக தொழில்துறை அமைச்சரும், மதுரவாயல் பகுதி கழக செயலாளருமான பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாளம்பட்டு பஞ்சாயத்து, வானகரம் முதல்நிலை ஊராட்சி, பெருமாள்பட்டு பகுதிகளில் வீதி,வீதியாக நடந்து சென்று வாக்குசேகரித்தனர்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கழக நிர்வாகிகள். கழக அரசின் சாதனைகளையும். அம்மா அரசின் மக்கள் நலத்திட்டங்களையும் முன்னிறுத்தி வாக்கு சேகரித்து வருகிறோம். செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக எங்களை வரவேற்கின்றனர். தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு, வறட்சி நிவாரணம் போன்ற எந்தவிதமான மக்கள் நலத்திட்டங்களும் கிடைக்க விடாமல் செய்யும் தி.மு.க.வுக்கு புத்தாண்டு பரிசாக உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளில் தோல்வியை தருவதற்கு மக்கள் முடிவெடுத்து விட்டனர். இந்த உள்ளாட்சித் தேர்தலோடு தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு முடிவுரை எழுத தயாராகி விட்டனர். கழக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது மாவட்ட அவைத்தலைவர் காசு ஜனார்தனம், வட்ட கழக செயலாளர் மதுரவாயல் ஏ.தேவதாஸ், மாவட்ட பாசறை செயலாளர் மகேஷ் உட்பட ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் உடன் சென்றிருந்தனர்.