தற்போதைய செய்திகள்

பெரம்பூர் பகுதி மக்களுக்கு கழகம் சார்பில் இலவச குடிநீர் – அவைத்தலைவர் இ. மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினர்….

பெரம்பூர்:-

பெரம்பூரில் மாவட்ட கழகம் சார்பில் இலவச குடிநீர் விநியோகத்தை அவைத்தலைவர் இ.மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பெரம்பூர் பகுதி எம்.கே.பி.நகரில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆழ்துளை குழாய் மூலம் இலவச குடிநீர் விநியோகம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் லயன் ஜி.குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் கழக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு குடிநீரை வழங்கி துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஜெ.கே.ரமேஷ், டிஒய்கே.செந்தில், டேவிட்ஞானசேகரன், லயன் ஜி.குமார், என்.எம்.பாஸ்கரன், எஸ்.சைலேஷ், எஸ்.ஏ.சூசை, ஆக்கம் அகஸ்டின், கே.அஸ்லாம், வி.பொன்முடி, வி.கோபிநாத், ஆர்.நித்தியானந்தம், குணசேகரன், மகேந்திரமணி, கடல்ராஜன், புல்லட் டி.பிராங்கிளின், எஸ்பிபி.பிரேம்குமார், கே.செல்வராணி, ஜி.வினோத்குமார், ஜெஸ்டின் பிரேம்குமார், பி.சந்தோஷ், கே.ராஜா, வினாயகம், ஆர்.கே.ரமேஷ்பாபு, மற்றும் மாவட்ட பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.