தற்போதைய செய்திகள்

மக்களின் தேவைகளை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு….

தருமபுரி:-

மக்களின் தேவைகளை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பைசுஅள்ளி ஊராட்சி, சின்னமுத்து கொட்டாய் பகுதி நேர நியாய விலைக்கடையை வைத்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் நியாய விலைக்கடைகள் 447 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 561 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் மற்றும் மகளிர் நியாயவிலைக்கடைகள் 9 என ஆக மொத்தம் 1017 நியாய விலைக்கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் நியாயவிலைக்கடைகள் 41 என ஆக மொத்தம் 1058 நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.

தற்போது திறக்கப்பட்டுள்ள சின்னமுத்துகொட்டாய் பகுதிநேர நியாய விலைக்கடை 1059 வது நியாயவிலைக்கடையாகும். பைசுஅள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டில் 2 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 1 பகுதிநோர நியாயவிலைக்கடை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. கெங்குசெட்டிப்பட்டி தாய் நியாயவிலைக்கடை 810 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது சின்னமுத்துகொட்டாய் கிராமத்தில் முதலாவது பகுதிநேர நியாயவிலைக்கடை பிரித்தப்பின்னர் 156 குடும்ப அட்டைகளுடன் செயல்படும்.

தற்போது சின்னமுத்துகொட்டாய் கிராமத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி கெங்குசெட்டிப்பட்டி நியாயநிலைக்கடையிலிருந்து 156 குடும்ப அட்டடைகளை பிரித்து புதியதாக சின்னமுத்துகொட்டாய் கிராமத்தில் முதலாவது பகுதிநேர நியாயவிலைக்கடை திறக்கப்பட்டுள்ளது.

தருமபுரி பைசுஅள்ளியில் அரசு சட்டக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. மேலும் பெரியார் பல்கலைகழக விரிவாக்க மையம் இப்பகுதியில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 15 முழுநேர நியாய விலைக்கடைகள், 58 பகுதி நேர நியாய விலைக்கடைகள் என ஆகமொத்தம் 73 நியாய விலைக்கடைகள் புதியதாக துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு பொதுமக்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழால் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் எ.கோவிந்தசாமி, கூட்டுறவு துணைப்பதிவாளர் இரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், தருமபுரி சார் ஆட்சியர் ம.ப.சிவன் அருள் துணை வேந்தர் பார்த்தசாரதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சிவபிரகாசம், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மதிவாணன், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளாச்சி அலுவலர்கள் வடிவேலன், வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.