இந்தியா மற்றவை

டாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

ஜம்மு அருகே டாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் தாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் ஜம்மு அருகே தாவி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர், விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.