தற்போதைய செய்திகள்

கிராமங்கள் வளர்ச்சி அடைய கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பிரச்சாரம்

தூத்துக்குடி

கிராமங்கள் வளர்ச்சி அடைய கழக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பிரச்சாரம் செய்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிந்தலக்கரை, உருளையன்பட்டி ஆகிய இடங்களில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சியினருக்கு ஓட்டு போட்டால் அது செல்லாத ஓட்டுக்கு சமம். அவர்களால் நிச்சயம் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. ஆளும் கட்சியான கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் உங்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும். எனவே மக்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கிராமங்களில் வளர்ச்சி அடைய கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

பிரச்சாரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வெள்ளைச்சாமி, கோவில்பட்டி இளைஞர் பாசறை துணை செயலாளர் கவி அரசன், ஊராட்சி செயலாளர் சங்கர், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் ஜெகதீஷ்வரன் உள்பட பலர் உடன் சென்றனர்.