தற்போதைய செய்திகள்

அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள்…

திண்டுக்கல்:-

அரசின் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு தலைவராக வி.மருதராஜ், துணைத்தலைவராக ஆர்.வி.என்.கண்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பேசியததாவது:-

மக்களால் உருவாக்கபட்ட கூட்டுறவு சங்கத்தை மக்களே நிர்வகிக்கிக்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் 2013-ம் ஆண்டில் அம்மா அவர்கள் சட்டபேரவையில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த ஆணையிட்டார்கள். அதன்படி கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்று தேர்த்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்களால் நிர்வாகம் நடைபெற்று 5 ஆண்டு காலம் முடிவுற்றது.

அதனை தொடர்ந்து, 2018-ம் ஆண்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாககுழு தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாககுழு உறுப்பினர்கள் ஆகியோர்களின் பதவி ஏற்பு விழா இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஏழை, எளியோர் குறிப்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏழை விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன், விலையில்லா ஆடு வளர்ப்பு கடன், குறைந்த வட்டியில் சிறுபான்மையினருக்கு டாம்கோ கடன்கள், பிற்படுத்தப்பட்டோர்களுக்கு டாப்செட்கோ கடன்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஏழை, எளியோருகளுக்காகவே செயல்படுத்தபட்டு வருகிறது.

அதனடிப்படையில், கூட்டுறவுத்துறையின் மூலம் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் மிககுறைந்த விலையில் அம்மா மருந்துகள், பண்ணை பசுமை காய்கறிகள் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் அம்மா அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் வருவாய்த்துறை சான்றுகள், பட்டா மாறுதல், சாதி சான்று ஆகியவைகளை கூட்டுறவு சங்கங்களின் இ-சேவை மையம் மூலம் பெறுவதற்கு அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத்துறையில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் விவசாயிகளின் நலன் கருதியும், தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீர்நிலை சீரமைப்புபணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில எதிர் கட்சிகள் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, அரசால் செயல்படுத்தபட்டு வரும் பல்வேறு நலதிட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.பி.பரமசிவம் (வேடசந்தூர்), சே.தேன்மொழி (நிலக்கோட்டை), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயக்குமார், மண்டல இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) கே.வி.எஸ்.குமார், மேலாண்மை இயக்குநர் (திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி) ப.உமா மகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.