தற்போதைய செய்திகள்

மக்களின் துயரங்களை போக்கி உண்மை தோழனாக செயல்படுவது கழகம்தான் – கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் பெருமிதம்

திருப்பத்தூர்

தமிழக மக்களின் துயரங்களை போக்கி உண்மைத் தோழனாக செயல்படும் ஒரே கட்சி கழகம்தான் என்றுகழக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா பத்திரிகை ஆசிரியருமான மருது அழகுராஜ்பெருமிதத்துடன் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை சாமான்கள் காய்கறிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய தொகுப்பினை கிராமம் கிராமமாக சென்று கழக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா பத்திரிகை ஆசிரியருமான மருது அழகுராஜ் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, இன்று உலவும் மூன்றாம் உலகப்போருக்கு நிகரான ஒரு வைரஸ் தொற்றை எதிர்க்கின்ற யுத்தத்தை சந்திக்கின்ற நிலையில், பாரதமே இந்த வைரஸிலிருந்து தன்னை பாதுகாத்து கொண்டும் பிற நாட்டுக்கு உதவியும் செய்கின்ற உன்னதமான நிலைக்கு வந்து உள்ளது என்றால் தமிழகமே விழித்திரு, தனித்திரு, விலகி இரு, என பாரத பிரதமர் முழுஊரடங்கு அறிவிக்கும் முன்பே தமிழகத்தை கண் இமை காப்பது போல தமிழக மக்களை காப்பாற்ற ஊரடங்கை முன்பே அறிவித்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆசீர்வாதத்துடன் அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கிய எடப்பாடியார், புரட்சித்தலைவி தங்கத்தாரகை அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து இன்று இரு தெய்வங்களின் ஆசீர்வாதத்துடன் தமிழகத்தின் அரசியல் சாணக்கியர் ஆக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட ஊரடங்கு உத்தரவால் சாமானிய மக்கள் பாதிப்பு அடையக்கூடாது என்று நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் ரொக்கமாகவும் 3 மாதங்களுக்கு தேவையான பொருட்களை விலையில்லாமல் அளித்து வருகிறார்.அம்மா உணவகம் என்ற அட்சய பாத்திரம் மூலம் தினமும் 7 லட்சம் நபர்களுக்கு விலையில்லாமலும் 3 நேரமும் கழகம் சார்பில் உணவு அளித்தும் வருகிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மை நம்பி வந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார். டெல்லியில் தனிமைப்படுத்தி இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை தற்போது ரம்ஜான் நோன்பு காலமாக இருப்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி டெல்லி அரசை வலியுறுத்தி தமிழக மக்களை கண்ணிமை போல் காத்து வருகிறார் எடப்பாடியார்.

சிவகங்கைச்சீமையில் மருது சகோதரர்கள் போல் அமைச்சர் பாஸ்கரனும் மாவட்ட செயலாளர் செந்தில்நாதனும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கேற்ப இருவரும் சிவகங்கை மாவட்டத்தை கண்ணிமை போல் காத்து வருகின்றனர்.

இருவருக்கும் துணையாக கழக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா பத்திரிகை ஆசிரியருமான மருது அழகுராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாமானிய மக்களின் தோழனாகவும் இன்று மக்களின் அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை சாமான்கள் காய்கறிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய தொகுப்பினை கிராமம் கிராமமாக நேரடியாக சென்று கட்சி பாகுபாடின்றி வழங்கி வருகிறார்.

இந்த வைரசுக்கு எதிராக தம் உயிரையும் துட்சமாக கருதி பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையின் சேவையினை பாராட்டியும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். தமிழகமெங்கும் கழகம் அன்று முதல் இன்று வரை என்றும் மக்களின் துயரங்களை போக்கி மக்களின் தோழனாக செயல்படும் ஒரே கட்சி கழகம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.