சிறப்பு செய்திகள்

அன்னையரை எந்நாளும் போற்றுவோம் – துணை முதலமைச்சர் ட்விட்டரில் வாழ்த்து

சென்னை

தன்னலம் பாராது மற்றவர்களுக்காக உழைக்கும் தியாக உள்ளங்களாம் அன்னையரை எந்நாளும் போற்றுவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்திருப்பதாவது:-

ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை. என்றுமே தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டும் சிந்தையில் நிறுத்தி ஓயாது உழைக்கும் தியாக உள்ளங்களாலும் அன்னையரை எந்நாளும் போற்றுவோம்.

மக்களால் நான், மக்களுக்காக நான் என தன்னலம் கருதாமல் தாயுள்ளத்தோடு மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இந்நன்னாளில் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு ட்விட்டரில் துணை முதலமைச்சர் பதிவு செய்துள்ளார்.