தற்போதைய செய்திகள் திருவள்ளூர்

4 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்பு – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவள்ளூர்

4 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்புகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்.

ஊரடங்கு காரணமாக மக்களுக்கு அரசின் சார்பிலும். கழகத்தின் சார்பிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மெதூர், போளாச்சி அம்மன் குளம், அவரிவாக்கம், திருப்பாலைவனம், பகுதியில் உள்ள 4000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் வழங்கினார்.

இதுகுறித்து சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொன்னேரி தொகுதியில் கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொகுதியில் 1.50 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி தொகுப்புகளை வழங்கி வருகிறோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.ராகேஷ், ஒன்றிய கழக செயலாளர் மோகனவடிவேல், 15-வது வட்ட கழக செயலாளர் காமராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், பெரும்பேடு முன்னாள் தலைவர் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அமிர்தலிங்கம், சிறுணியம் கிளை செயலாளர் விஜயகுமார், சிறுணியம் கிளை பிரதிநிதி கோகுல் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.