திருப்பூர்

திருப்பூரில் 120 திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள்

திருப்பூர்

திருப்பூரில் 120 திருநங்கைகளுக்கு நிவாரணப்பொருட்களை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்

திருப்பூரில் ஊரடங்கு காரணமாக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாநகர் மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான செலவில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் 120 திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர் பட்டுலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பூலுவப்பட்டி பாலு, முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், வார்டு செயலாளர் துரை, கழக நிர்வாகிகள் ஹரிஹரசுதன், ஷாஜகான், ஐஸ்வர்ய மஹாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.