மதுரை

வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் 200 கிராமிய நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்

மதுரை

வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் 200 கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கடந்த 55 நாட்களுக்கு மேலாக நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த தடை காலத்தில் முதலமைச்சர் பல்வேறு நிவாரண தொகுப்புகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். கழகத்தின் சார்பிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் எளிய மக்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் தொடர்ந்து மேலூர், கிழக்கு, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் வேளையில் அவனியாபுரத்தில் இருக்கும் கிராமிய நாட்டுப்புற கலைஞர்களான வில்லுப்பாட்டு கலைஞர்கள், நாடக கலைஞர்கள், தப்பாட்ட கலைஞர்கள், மேளதாளங்கள் கலைஞர்கள் உள்ளிட்டோரின் 200 குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சமையல் தொகுப்புகளை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் கழக நிர்வாகிகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் பகுதி இலக்கிய அணி செயலாளர் மோகன் தாஸ் வட்டக் கழக செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதனை பெற்றுக் கொண்ட குடும்பங்கள் நாங்கள் மக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் ஆனால் எங்க நிலைமை அறிந்து தற்போது இந்த நிவாரண தொகுப்புகளை வழங்கி எங்களை மகிழ்வித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.