சேலம்

4 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் – ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ வழங்கினார்

சேலம்

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் அரிசி மளிகை மற்றும் காய்கறிகளை மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ வழங்கினார்

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அழகாபுரம் காவல்நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார்.

இதில் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4 மாற்று திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனமும்,தலா 750 ரூபாய் மதிப்பிலான கிருமிநாசினி, கையுறை, முக கவசம், முதலுதவி பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

மேலும் அஸ்தம்பட்டி பகுதி கழகம் சார்பில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை, காய்கறி தொகுப்புகள், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் உணர்வூட்டும் பயிற்சி சாதனம் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி பகுதி செயலாளர்கள், சரவணன், முருகன், சூரமங்கலம் பகுதி 2 செயலாளர் பாலு, சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூ,தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.