திருவள்ளூர்

ஊரடங்கு தளர்வு முடியும் வரை திருவள்ளூர் மாவட்ட அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ தகவல்

திருவள்ளூர்

ஊரடங்கு தளர்வு முடியும் வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து ஏழை எளிய மக்களின் சிரமத்தை தவிர்க்க முதல்வர் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 அம்மா உணவகங்களிலும் 3 வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் இந்த 6 உணவகங்களிலும் 3 வேளையும் உணவு வழங்க செலவின தொகையை வழங்கியிருந்தார்.

அதனையடுத்து திருவள்ளூர் நகரில் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் பெரியகுப்பம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரியகுப்பம் அம்மா உணவகத்தில் இட்லி, வடை ஆகியவற்றை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். அப்போது முதல்வரின் உத்தரவுக்கிணங்க தற்போது வழங்கப்படுவது போல் ஊரடங்கு முழு தளர்வு ஏற்படும் வரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகத்தில் 3 வேளையும் பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படும். முட்டை மற்றும் இனிப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மேற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாநில அம்மா பேரவை இணை செயலாளர் செவ்வை சம்பத்குமார், துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், பூண்டி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், நகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட மாணவரணி தலைவர் நேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.