மதுரை

முடிதிருத்தும் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி : வி.வி.ராஜன்செல்லப்பா ஏற்பாட்டில் கழகத்தினர் வழங்கினார்

மதுரை

திருப்பரங்குன்றத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 300பேர் குடும்பங்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் கழகத்தினர் நிவாரண தொகுப்புகளை வழங்கினர்.

கடந்த 50 நாட்களுக்கு மேலாக நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து கழகத்தின் சார்பிலும் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் மேலூர், கிழக்கு, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் வேளையில் திருப்பரங்குன்றம் பகுதியிலிருக்கும் 300க்கு மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் கழக நிர்வாகிகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம், பகுதி இலக்கிய அணி செயலாளர் மோகன் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் எங்கள் நிலையை அறிந்து தற்போது இந்த நிவாரண தொகுப்புகளை வழங்கிய முதலமைச்சருக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினர்.