திருவண்ணாமலை

ஓரந்தவாடியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் – ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அடுத்த ஓரவந்தவாடி ஊராட்சியில் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஓரவந்தவாடி ஊராட்சி வேளாங்கண்ணி நகரில் புதிதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருவண்ணாமலை ஆவின் துணை பொது மேலாளர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். ஆவின் மேலாளர் காளியப்பன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நைனா கண்ணு முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பால் கூட்டுறவு சங்கத்தினை குத்து விளக்கு ஏற்றியும், பால் கொள்முதல் செய்தும், சங்கத்தை தொடங்கி வைத்தார் மேலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் கைகளை கழுவ சோப்புகள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து ஓரவந்தவாடி ஊராட்சியில் உள்ள தூய்மை காவலர்கள், டேங்க் ஆபரேட்டர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார். பின்பு ஊராட்சியில் உள்ள சுமார் ஆயிரம் பொதுமக்களுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஏ.கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜ், செங்கம் மகரிஷி, மனோகரன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கே.டி.ராஜமூர்த்தி, பனைஓலை பாடி முருகேசன் சகாதேவன் பெரிய ஏரி மோகன் பிரபா, தொரப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் கவின் முத்தனூர் பன்னீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் வி.பழனிராஜ் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பனை ஓலைப்பாடி பெரிய ஏரி முத்தனூர் தொரப்பாடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்கள், டேங்க் ஆபரேட்டர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முகக் கவசங்களை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.