ஈரோடு

மகளிர் குழுக்களுக்கு ரூ.46.55 லட்சம் கடன் உதவி – எம்.எல்.ஏக்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு வழங்கினர்

ஈரோடு

ஈரோடு கிழக்கு மேற்கு தொகுதிகளை சார்ந்த 56 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 751 மகளிருக்கு ரூ.46.55 லட்சம் மதிப்பில் சிறப்பு கடனுதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கோபி செட்டிபாளையம் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முதல் 6 மாதம் வரை கடன் தொகையினை திருப்பி செலுத்த தேவையில்லை என்ற நிலையில் கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ, சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ ஆகியோர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பஜார் கிளை, சோலார் கிளை, சம்பத்நகர் கிளை, மாணிக்கம்பாளையம் கிளை, சூரம்பட்டிவலசு கிளை மற்றும் திண்டல்மலை, சித்தோடு, லக்காபுரம், அக்ரஹாரம், நசியனூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என 56 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 751 மகளிருக்கு ரூ.46.55 லட்சம் மதிப்பில் முதல் ஆறு மாதம் வரை திருப்பி செலுத்த தேவையில்லை என்ற நிலையில் சிறப்பு கடனுதவிகளை வழங்கினர்.

இந்த கடன் தொகையானது ஆறு மாதத்திற்கு பிறகு, முறையாக வட்டியுடன் 34 மாத தவணைகளில் கடன்களை திருப்பி செலுத்த வேண்டும். இந்நிகழ்ச்சியின் போது ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சார்பாக ஈரோடு மாநகராட்சியில் உள்ள 11 அம்மா உணவகங்கள், புளியம்பட்டி நகராட்சி அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்குவதற்காக ரூ.1,15,000த்திற்கான காசோலையும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.22,000த்திற்கான காசோலையும், பவானி, கோபி, சத்தி நகராட்சி அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவதற்கு ரூ.15,000த்திற்கான காசோலையும் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் வழங்கப்பட்டது

இந்நிகழ்வில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் என்.கிருஷ்ணராஜ், துணைத்தலைவர் கேசவமூர்த்தி, இயக்குனர்கள் ஜீவா ராமசாமி, மனோகரன், மாவட்ட சிந்தாமணி தலைவர் ஆர்.ஜெகதீசன், மாவட்ட ஆவின் துணைத் தலைவர் ஈரோடு குணசேகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் புதூர் கலைமணி, சிவகிரி பேரூராட்சி கழக செயலாளர் பி.டி.ராமலிங்கம், மாநில மத்திய கூட்டுறவு பணியாளர்கள் சங்க இணைச் செயலாளர் எஸ்.பழனிச்சாமி, காஜா மைதீன், ஆர்.ஜி.கார்த்திக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் மா.இளங்கோவன், முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி, மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.