திருவண்ணாமலை

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பவர் டில்லர்கள் – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் வேளாண்மை துறை சார்பில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பவர் டில்லர்களை சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அழிவிடைதாங்கி பெருங்களத்தூரில் கொற்கை, கீழாத்தூர், ஆகிய பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பவர் டில்லர் 16, ரோட்டவேட்டர் 3 ஆகியவைகளை ரூ.34 லட்சம் மதிப்பிலான பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் வழங்கினார். இதில் ஒவ்வொரு குழுவுக்கும் தலா 5 லட்சம் மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குனர் கே.முருகன் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குனர் ரமணன், வேளாண் உதவி இயக்குனர் ஏஞ்சனாபொன்மணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் சுமத்திரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தாசில்தார் சுபாஷ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே பாஸ்கர் ரெட்டியார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மகேந்திரன், வேளாண் துறை துணை அலுவலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.