தமிழகம்

மின்கட்டணம் செலுத்த காலக்கெடு ஜூன் 6-ந்தேதி வரை நீட்டிப்பு – மின்வாரியம் அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த காலக்கெடு ஜூன் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு;-

கோவிட்-19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இந்திய அரசு ஊரடங்கினை மேலும் 2 வாரங்களுக்கு 18.05.2020 முதல் 31.05.2020 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ் நாட்டிலும் அதே போன்று ஊரடங்கு 18.05.2020 முதல் 31.05.2020 வரை சில வழிகாட்டுதல்களுடன் தொடரப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படி 25.03.2020 முதல் 05.06.2020 வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின்இணைப்பிற்கான மின்கட்டணத்தை 06.06.2020 வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.