தற்போதைய செய்திகள்

கட்டிட தொழிலாளர்கள் 500 பேருக்கு நிவாரண பொருட்கள் – வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்

சென்னை

விருகம்பாக்கம் தொகுதியில் கட்டிட தொழில் செய்யும் 500க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி வழங்கினார்.

விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 137-வது வார்டில் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் கட்டிட தொழில் செய்யும் 500-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் தலா 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோதுமை, உப்பு, ரவை, பிஸ்கட் பாக்கெட், 5-வகையான காய்கறிகள் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி வழங்கினார்.

நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட ஏழை மக்கள், வி.என்.ரவி எம்.எல்.ஏவுக்கு நன்றி தெரிவித்ததோடு, அம்மாவின் அரசை பாராட்டினர். அப்போது முதலமைச்சரின் தனித்திரு விழித்திரு வீட்டில் இரு என்ற வாசகத்தின் அடிப்படையில் தென் சென்னை தெற்கு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி பொதுமக்களிடம் கேட்டு கொண்டார்.

மேலும் அவர், பொதுமக்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கைகளை அவ்வப்பொழுது சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். முகத்தை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஏ.எம்.காமராஜ், மாரிமுத்து, செல்வநாயகம், எஸ்.பி.குமார், எஸ்.ஹரிகிருஷ்ணன், ரவிசந்திரன், அண்ணாமலை, இ.சங்கர், ராஜா, பில்டர் மோகன், வைகுண்டராஜன், காமாட்சி, சரோஜா, விஜி, சுரேஷ், டி.சி.அசோக்குமார், அம்பிகா, தேவி, ஜெயலட்சுமி, முரளி, சீனிவாசன், தியாகராஜன், எம்.ஜி.ஆர்.நகர்.முரளி, முத்து, மற்றும் கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.