சென்னை

கொரோனா வைரசை ஒழிக்க எல்லைச்சாமியாக முதலமைச்சர் அவதரித்துள்ளார்- மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்

சென்னை

தமிழகத்தில் கொரோனா வைரசை ஒழிக்க முதலமைச்சர் எல்லைச்சாமியாக அவதரித்துள்ளார் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தண்டையார்பேட்டை 40வது வட்டம் வ.உ.சி. நகர், ஒத்தவாடை, பகுதியில் 500 ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி தொகுப்பினை வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்.

அப்போது மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசுகையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவையொட்டி பொதுமக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களில் மூன்றுவேளையும் விலையில்லா உணவையும், வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட தொகுப்புகளை நிவாரணமாக வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்கவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் நலனை முழுமையாக பாதுகாக்கும் முயற்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எல்லைசாமியாக அவதரித்துள்ளார். மேலும் வடசென்னை பகுதிகளில் நோய்த்தொற்றை தடுக்க வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகம் சார்பில் கடந்த 58 நாட்களாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 40 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு 200 டன் அரிசி, 75 டன் காய்கறிகள், 5 டன் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசின் நெறிமுறைகளை உணர்ந்து சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், வட்ட செயலாளர்கள்
இ.வேலுமேஸ்திரி, வி.எஸ்.புருஷோத்தமன், எல்.எஸ்.மகேஷ்குமார், இரா.முரளிமுருகன், டி.பிரபாகரன், ஏ.இளவரசன், இஎம்எஸ் நிர்மல் குமார், டி.எம்.ஜி.பாபு, பி.சேகர், எஸ்.மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.