தற்போதைய செய்திகள்

கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 243 பேருக்கு நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்…

ஈரோடு:-

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் அம்மாபேட்டை வட்டார 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பட்லூர்நால்ரோட்டில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி, விவசாயக்கடனுதவி, மானியத்துடன் வேளாண் கருவிகள், ஆடு, மாடு வழங்குதல், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம், உட்பட ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அம்மாவின் வழியில் விவசாயிகளுக்காக விதைகள், உரங்கள் மானியத்துடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் காக்கும் அரசு அம்மா அரசு.

திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அம்மா ஆட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு 200யூனிட் மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி துறையில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள், சீருடைகள், பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் இகல்வி உபகரணங்கள், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு 10 லட்சம் பேருக்கு தனி வீடுகளும், லட்சக்கணக்கான நபர்களுக்கு அடிக்குமாடி குடியிருப்பு வீடுகள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கி சாதனை புரிந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டதால் இன்று தமிழகம் முழுவதும் குளங்கள் தூர்வாரப்பட்டு மழைபெய்ததால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18,000 உதவித்தொகை வழங்கினார். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள் கொண்ட அம்மா பெட்டகம் வழங்கினார். அம்மா காப்பீட்டு திட்டத்தின் மூலம் பொதுமக்களின் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. நாள்தோறும் மக்கள் நலனுக்காக பாடுபடும் அம்மாவின் அரசு தொடர பொதுமக்கள் தங்களின் நல்லாதரவை வழங்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

அம்மாப்பேட்டை வட்டாரத்தில் உள்ள ஊமா ரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம் பேட்டை, ஒலகடம், வெள்ளி திருப்பூர், குறிச்சி,முரளி சென்னம்பட்டி, முகாசிப்புதூர், குருவரெட்டியூர், பட்லூர், மாணிக்கம்பாளையம், கன்னப் பள்ளி ஆகிய கூட்டுறவு சங்கங்களின் மூலம் 243 பயனாளிகளுக்கு ரூ 2.63 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா , மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் என்.கிருஷ்ணராஜ், அந்தியூர் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராஜா கிருஷ்ணன். முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர்,அம்மாப்பேட்டை ஒன்றியக் கழக துணைச் செயலாளர் லட்சுமணன், பேரவை செயலாளர் ராதா, வாத்தியார் குப்புசாமி, பாவாதங்கமணி, பேரூராட்சி செயலாளர் டி.செந்தில்குமார், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சசி (எ) இளங்கோ,கூட்டுறவு சங்க தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி,சுந்தர்ராஜன், கொமாரசாமி, சசி (எ) இளங்கோ,சர்க்கரை செட்டி, வெங்கடாசலம், முத்துவேல்,ஜானகி,மலர்க்கொடிஉள்பட பலர் கலந்து கொண்டனர்