தற்போதைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் 103 இடங்களில் கழக கூட்டணி வெற்றி

மதுரை:-

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 9 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி மற்றும் 94 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட கழக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஓட்டு எண்ணிக்கை முடிக்கப்பட்டு தற்போது வெற்றிபெற்றவர்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி மதுரை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான 23 இடங்களில் 2-வது வார்டில் அகிலா, 4-வது வார்டில் கீதா ரவிச்சந்திரன், 5-வது வார்டில் ராஜலட்சுமி, 12-வது வார்டில் சுதாகரன், 15-வது வார்டில் செல்வராணி, 16-வது வார்டில் ஐயப்பன், 17-வது வார்டில் சத்ய மீனாட்சி, 18-வது வார்டில் லட்சுமிபதி, 23-வது வார்டில் வசந்தா என கழக வேட்பாளர்கள் வெற்றிபெற்றதன் மூலம் 9 வார்டுகளை அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது

மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 214 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில் அ.தி.மு.க 89 இடங்களிலும், பா.ஜ.க 2 இடங்களிலும், தே.மு.தி.க 3 இடங்களிலும் என மொத்தம் 94 இடங்களை கழக கூட்டணி கைப்பற்றியுள்ளது.திருமங்கலம் ஒன்றியத்தில் 1-வது வார்டில் மின்னல்கொடி, 2-வது வார்டில் ஆண்டிச்சாமி, 3-வது வார்டில் முத்துப்பிள்ளை, 6-வது வார்டில் செல்வம், 9-வார்டில் பரமன், 10-வது வார்டில் சிவப்பிரியா, 11-வது வார்டில் லட்சுமி, 12-வது வார்டில் வளர்மதி, 13-வது வார்டில் அங்கு லட்சுமி, 14-வார்டில் லதா ஜெகன் ஆகிய 10 வார்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்களும், 5-வது வார்டில் பா.ஜ.க.வை சேர்ந்த துரைசாமி முருகன், 7-வது வார்டில் தே.மு.தி.க.வை சேர்ந்த தீபா சுந்தர் ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். மொத்தம் 12 இடங்களை அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது

கள்ளிக்குடி ஒன்றியம் 1-வது வார்டில் அன்னலட்சுமி, 2-வார்டில் ஆதிநாராயணன், 3-வார்டில் மீனாட்சி, 4- வார்டில் லட்சுமி , 5- வார்டில் ராஜேஸ்வரி, 8- வார்டில் முருகன், 9-வார்டில் காளியம்மாள், 11-வார்டில் சுப்புலட்சுமி, 13-வார்டில் சஞ்சய்காந்தி, 14-வார்டில் கலையரசி ஆகிய கழக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்த ஒன்றியத்தில் 10 இடங்களை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது.

கல்லுப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 3-வது வார்டில் பாவந்தாள், 4-வது வார்டில் சண்முகப்பிரியா, 8-வது வார்டில் ராமராஜ், 9-வது வார்டில் முனியம்மாள், 11-வது வார்டில் சுப்புலட்சுமி, 12-வது வார்டில் பிருந்தாதேவி ஆகிய 6 இடங்களில் அ.தி.மு.க.வும், 6-வது வார்டில் தே.மு.தி.கவை சேர்ந்த அழகர்சாமி, 13-வது வார்டில் தே.மு.தி.க.வை சேர்ந்த பேச்சியம்மாள் என ஆக மொத்தம் 8 இடங்களை அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது.

மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 11-வது வார்டில் பொன்னுச்சாமி, 13-வது வார்டில் சரோஜா, 14-வது வார்டில் கவுரி மீனாட்சி, 16-வது வார்டில் வினோதினி, 17-வார்டில் பஞ்சவர்ணம், 19-வது வார்டில் பிரபு, 20-வது வார்டில் பிரபு, 24-வது வார்டில் சுமித்ரா சரவணன் என ஆக 8 இடங்களை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது

கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 2-வது வார்டில் வள்ளிமயில், 3-வது வார்டில் நித்யா, 4-வது வார்டில் ராஜபிரியா, 5-வது வார்டில் கந்தசாமி, 7-வது வார்டில் நயினார், 9-வது வார்டில் மழவேந்தி, 10-வது வார்டில் நாச்சம்மாள், 11-வது வார்டில் வளர்மதி, 13-வது வார்டில் கவிதா, 14-வது வார்டில் கவுசல்யா என கழக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்த ஒன்றியத்தில் 10 இடங்களில் அ.தி.மு.க வெற்றிபெற்றுள்ளது. இதேபோல் 17-வது வார்டில் த.மா.கா.வை சேர்ந்த செல்லம்மாள் வெற்றி பெற்றுள்ளனார். மொத்தம் 11 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி வென்றுள்ளது.

வாடிப்பட்டி ஒன்றியம் 1-வது வார்டில் மகாலட்சுமி, 2- வது வார்டில் பவித்ரா, 3-வது வார்டில் தங்கபாண்டி, 5-வது வார்டில் தங்கபாண்டி, 9-வது வார்டில் சிவகுமார், 11-வது வார்டில் வசந்த கோகிலா, 12-வது வார்டில் பஞ்சவர்ணம் ஆகியோர் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். மொத்தம் 7 இடங்களை அ.தி.மு.க ஏற்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஒன்றியம் 1-வது வார்டில் பிரபு, 7-வது வார்டில் தங்கம்மாள், 8-வது வார்டில் சிவசங்கரி, 9-வது வார்டில் பஞ்சு, 10-வது வார்டில் ரேவதி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். மொத்தம் 5 இடங்களை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது. திருப்பரங்குன்றம் ஒன்றியம் 10-வது வார்டில் மாயி, 13-வது வார்டில் சாந்திகோபாலாச்சாரி, 14-வது வார்டில் நிலையூர் முருகன், 19வது வார்டில் ஜெயக்குமார், 20-வது வார்டில் இளங்கோ, 21-வது வார்டில் பார்த்திபராஜா என அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். மொத்தம் 6 வார்டுகளை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது.

சேடப்பட்டி ஒன்றியம் 8-வது வார்டில் அழகு தாய், 9-வது வார்டில் முத்துமாரி, 13-வது வார்டில் பாண்டிராஜ் என அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதேபோல் 11-வது வார்டில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 4 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது

உசிலம்பட்டி ஒன்றியம் 2-வது வார்டில் பாண்டிச்செல்வி, 5-வது வார்டில் புஷ்பா, 9-வது வார்டில் பாண்டியம்மாள், 10-வது வார்டில் வதனா, 13-வது வார்டில் வீரம்மாள் ஆகியோர் வெற்றிபெற்றதன் மூலம் 5 இடங்களை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது.
மதுரை கிழக்கு ஒன்றியம் 2-வது வார்டில் மணிமாலா, 6-வது வார்டில் பாக்கியலட்சுமி, 16-வது வார்டில் தமிழரசி என ஆகிய 3 இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்களும், 8-வது வார்டில் பா.ஜ.க.வை சேர்ந்த பிரசன்னா வெற்றிபெற்றுள்ளார். மொத்தம் 4 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது

மதுரை மேற்கு ஒன்றியத்தின் 2- வார்டில் முருகேசன், 4-வது வார்டில் ஜெகதா, 5-வது வார்டில் செல்லப்பாண்டி, 6-வது வார்டில் அம்மு, 12-வது வார்டில் செந்தில்குமரன் என கழக வேட்பாளர்கள் வெற்றிபெற்றதன் மூலம் 5 இடங்களை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது.