தற்போதைய செய்திகள்

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் சட்ட முன்வடிவு – பேரவையில் நிறைவேறியது

சென்னை

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் சட்ட முன்வடிவ சட்டப்பேரவையில்

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தலைமை செயலகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி (ம) பேரூராட்சி தலைவர்கள் மறைமுகத் தேர்தல் தொடர்பாக 2016-ம்
ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சி சட்டங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவு சட்டமாக இயற்ற தாக்கல் செய்து பின்வருமாறு பேசினார்.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சி மேயருக்கான தேர்தல், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல், மாநகராட்சிகளின் மாமன்றம், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் அதே நேரத்தில்
நடைபெறும். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல், கட்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன.

சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், மாமன்றம் மற்றும் மன்ற உறுப்பினர்களின் ஆதரவு, மாநகராட்சி மேயருக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கும், முழுமையாக கிடைக்காத காரணத்தால், மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை என அரசின்கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாமன்றம் மற்றும் மன்ற உறுப்பினர்களின் ஆதரவு, மாநகரமேயருக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவருக்கும் கிடைக்கும் பட்சத்தில், மாமன்றம் மற்றும் மன்றங்கள் சிறந்த முறையில்செயல்படும் என்று அரசு கருதுகிறது.

அதனால் மாமன்ற மற்றும் மன்ற உறுப்பினர்களால், மறைமுகமாகமாநகர மேயர் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது, மிகவும் நன்மை பயக்கும் எனவும் அரசு கருதுகிறது. ஏற்கனவே மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், திமுக ஆட்சிக் காலத்தில், 2006-ம் ஆண்டில் மறைமுகத் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நேரடித் தேர்தல் மூலமாக மேயர்கள் மற்றும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகையில், பல்வேறு சிரமங்களை அனுபவ ரீதியாக சந்திக்கின்ற சூழல் எற்படுகிறது.

1) மிகப் பெரிய பரப்பளவும், மக்கள் தொகையும் கொண்டுள்ளமாநகராட்சிகள் / நகராட்சிகள், நேரடியாக மேயர்கள்/ தலைவர்கள்தேர்ந்தெடுக்கப்படும் போது, வார்டு உறுப்பினர்களைக் காட்டிலும், மேயர்கள்/ தலைவர்கள் உயர்ந்தவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இதன் காரணமாக இரு வகையான அதிகார அமைப்பு மற்றும்சமச்சீரற்ற அதிகாரப்பரவல் ஏற்படுகிறது. எனவே, ஜனநாயகத்தின் உயிர்மூச்சாக விளங்கும், சமநிலையில் உள்ளவர்களில் முதல்வர்என்ற அடிப்படைத் தத்துவம் செயலிழந்து போகின்றது.

2) அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மேயர்கள் மற்றும் தலைவர்கள் தனியாகவும், பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் தனியாகவும்,செயல்படும் நிலைமை ஏற்படுவதால், பிரச்சினைகளின் தாக்கம் அதிகமாகிறது. இதனால், மாமன்றம் மற்றும் மன்றங்களின்செயல்பாடுகள் வலுவிழந்து போவதுடன், அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள விதிகளின்படி, மாமன்றங்கள் சட்டப்பூர்வமானஇடைவெளிக்கொருமுறை கூடுவதென்பதே சிரமமாகின்றது. இதன் காரணமாக மக்கள் சேவை என்கின்ற மகத்தான பணிகடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் தாக்கம், மிகப் பெரிய உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்மற்றும் பேரூராட்சிகளில் பன்மடங்காக உருப்பெருகிறது.

3) 2006-ம் ஆண்டில், தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவை, 31.8.2006 அன்று சட்டமன்றத்தில்
நிறைவேற்றியபோது, அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எதிர்க் கட்சித் தலைவர்,பேரறிஞர் அண்ணா இருந்த காலம் வரை, மறைமுகத் தேர்தலாகத் தான் நடைபெற்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மேயர் ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும், அதேபோல மெஜாரிட்டியாக வரக்கூடிய உறுப்பினர்கள் வேறு கட்சியைச்சார்ந்தவர்களாகவும் வந்து விடுகின்ற காரணத்தால், மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்திலே வைத்து, அதை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும், அதனால் மக்களுடைய பிரச்சினைகள்தேக்கம் அடையக்கூடிய நிலையிலே இருக்கின்ற காரணத்தால், மறைமுகத் தேர்தல் தீர்மானத்தை நிறைவேற்றி தர வேண்டுமெனஅவர் கேட்டு கொண்டதையும் இங்கு நினைவு கூறுகிறேன்.

4) மேலும், வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவர், அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நன்கு அறிந்தவராகவும்,மக்களில் ஒருவராகவும் இருப்பார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரை மேயராகத் தேர்வு செய்யும் போது, அவர் மக்களின் தேவைகளை நன்கறிந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்படுகிறது.

5) தற்போது பல்வேறு மாநிலங்களில் மறைமுகத் தேர்தல் முறையில் தான், மாநகராட்சி மேயர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.ஆந்திரபிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, அசாம், பீகார், கோவா, ஹரியானா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான்,சிக்கிம், சண்டிகார், டில்லி, கேரளா, மத்திய பிரதேசம், அருணாசலபிரதேசம், தெலுங்கானா ஆகிய 18 மாநிலங்களில் மேயர்கள் மறைமுகத் தேர்தல் முறையில் தான் தேர்வு செய்யப்படுகின்றனர்.

6) மாமன்றம் மற்றும் மன்ற உறுப்பினர்களில் ஒருவர் மேயராகவும் / தலைவராகவும் தேர்வு செய்யப்படும்போது, அவர் உறுப்பினர்களின் பேராதரவுடன் சிறந்த முறையில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும் எனஅம்மா அவர்களின் அரசு கருதுகிறது.
எனவே, மேற்கூறிய காரணங்களுக்காகவும், மக்கள் பணி என்கின்ற மகத்தான சேவை, எள்ளளவும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று, மக்களின் வாடிநக்கைத் தரம் உயரவும், இந்த சட்டத் திருத்தம் மிகவும் அவசியம் என்பதால், இச்சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித் தரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இதன் பின்னர் இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.