மதுரை

தி.மு.க.வின் பித்தலாட்ட பிரச்சாரம் இஸ்லாமிய மக்களிடம் எடுபடாது – வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை

தி.மு.க.வின் பித்தலாட்ட பிரச்சாரம் இஸ்லாமிய மக்களிடம் எடுபடாது என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புறநகர் மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர். அதேபோல் தற்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். ஆனால் வேண்டுமென்றே திமுக குடியுரிமை சட்டத்தை வைத்து குளிர்காலம் என்று நினைக்கிறது. அதற்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவாக கூறிவிட்டார். திமுகவின் பொய் பிரச்சாரத்தை இஸ்லாமிய மக்கள் இனிமேல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வர இருக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

மத்திய அரசாங்கத்தால் கொடுத்து வந்த பாதுகாப்பு என்பது தமிழகத்தின் துணை முதலமைச்சருக்கும், தி.மு.க. தலைவர் தலைவர் ஸ்டாலினுக்கும் விலக்கிக் கொள்ளப்பட்டது. அது மத்திய அரசின் முடிவு. ஆனால் ஸ்டாலினுக்கு விலக்கப்பட்ட பாதுகாப்பிற்கு துரைமுருகன் புலம்புகிறார். அவருக்கு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.