தற்போதைய செய்திகள்

சிவகாசியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க முப்பெரும் விழா – அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ பங்கேற்பு

விருதுநகர்

சிவகாசியில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க முப்பெரும் விழாவில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட தலைவர் முருகேசன், துணைத்தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வில்லிஆழ்வார் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில முதன்மை பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில பொதுச்செயலாளர் செல்வன் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட பொருளாளர் முத்தையா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மச்சராசா, வேண்டுராயபுரம் கூட்டுறவு சங்கத் தலைவர் வேண்டுராயபுரம் காளிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.