தற்போதைய செய்திகள்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாவலர் விடுதி – அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மூலம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நோயாளிகளின் பாதுகாவலர்கள் தங்கும் விடுதியை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிவகங்கை மக்களுக்கு அவசரகால விபத்துக்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவையான அனைத்து உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் இங்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் நோயாளிகளின் பாதுகாவலர்கள் தங்கும் வசதியை ஏற்படுத்தி தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் நேற்று அமைச்சர் ஜி.பாஸ்கரன் முயற்சியால் ரூ.47 லட்சம் மதிப்பிலான பாதுகாவலர் தங்கும் விடுதியை பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், சிவகங்கை நகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சசிகுமார், ராஜா, பலராமன், முருகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.