சிறப்பு செய்திகள்

கழகத்தின் அழியா- மங்கா புகழை காக்க அம்மா பிறந்த நாளில் உறுதி ஏற்போம் – புரட்சித்தலைவி அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை

புரட்சித்தலைவி தங்க மனத்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை சீரோடும், சிறப்போடும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடவும், கழகத்தின் அழியா புகழை, மங்கா புகழை காக்க அம்மா பிறந்தநாளில் உறுதி ஏற்போம் என புரட்சித்தலைவி அம்மா பேரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தனது வாழ்நாள் குறிக்கோளாக கொண்டு தவ வாழ்வு வாழ்ந்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக தலைமைக் கழகத்தில் நேற்று கழக புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின்பேரில்

புரட்சித் தலைவி அம்மா பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு, அம்மா அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

தொடர்ந்து, கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன், கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

முன்னதாக, தலைமைக் கழக நுழைவு வாயிலின் வலது புறம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இதய தெய்வம் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரும், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், தலைமைக் கழக மெயின் ஹாலில் நடைபெற்ற கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை மீனாட்சி அம்மன் சிலையினை வழங்கினார்.

தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை வரவேற்கும் விதமாக, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் சார்பில், சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்கள், குருத்தோலைகள் அழகுற அமைக்கப்பட்டும், தலைமைக் கழக நுழைவு வாயிலில் பசுமையான அலங்கார வளைவு அமைக்கப்பட்டும், செண்டை மேளம் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு வழங்கப்பட்டது.

கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 

* பாரத ரத்னா புரட்சித் தலைவரின் தூய தொண்டராக தன்னுடைய அரசியல் அத்தியாயத்தை துவங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர் மூச்சாக, சுவாசக் காற்றாக, தன்னை அர்ப்பணித்து, இந்திய தேசத்தின் மூன்றாவது மாபெரும் இயக்கமாக கழகத்தை உயர்த்தி காட்டிய ஆற்றல் அரசி நமது அம்மா!

எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டு வந்தாலும், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்களுக்காகவே இயங்கும்” என்பதை உறுதியுடன் உரைத்திட்ட தீர்க்கதரிசி நமது அம்மா!

இத்தாய் திருநாட்டின் சமூக நீதி காத்த வீராங்கணை நமது அம்மா! பெண் விடுதலைக்கு தொடர்ந்து போராடிய போராளி நமது அம்மா! மதச்சார்பற்ற உறுதியான இறை நம்பிக்கை கொண்ட ஆன்மீகத்தின் அடையாளம் நமது அம்மா! ஏழை, எளியோருக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பு வழங்கிய புரட்சியாளர் நமது அம்மா! இப்படி சாதனைகள் பல படைத்து, அன்னை தமிழகத்திற்கு புதிய சரித்திரத்தை உருவாக்கி தந்திட்ட சாதனைச் செம்மல் நமது அம்மா !

தாய் திருநாட்டு மக்களின் நலனும், உயர்வும், வளமும், மகிழ்ச்சியுமே தனது வாழ்வின் லட்சியமாக கொண்டு ஏழை, எளியோருக்கும், தாய்மார்களுக்கும், பெண் குலத்திற்கும், மாணவ சமுதாயத்திற்கும், இளைய சமுதாயத்திற்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், பாமரருக்கும், படித்தவர்களுக்கும், பட்டம் பெற்றவர்களுக்கும், சாமானியருக்கும், உழைக்கும் மக்களுக்கும், சாதி, மத, இன வேறுபாடின்றி, அனைத்து மக்களின் நல்வாழ்விற்கு ஈடு இணையற்ற எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, இன்றைக்கு அன்னைத் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நீங்காது, முழுமதியாக இதய தெய்வமாக இடம் பிடித்திருக்கும் தமிழர்குலச்சாமி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை, இப்பூவுலகில் அவதரித்த திருநாளை ஆண்டுமுழுவதும் “இளைஞர் எழுச்சி நாளாக” கடைபிடித்திடுவோம்.

இப்புனித திருநாளை முன்னிட்டு, கழக அம்மா பேரவையின் சார்பில், ஏழை எளியோருக்கும், மாணவ மாணவியருக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், சாமானியர்களுக்கும் உதவி செய்கின்ற வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற விழாக்கள் பல நடத்திடவும், அன்னதானம், ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தான தர்மங்களை தமிழர் குலச்சாமி அம்மா அவர்களின் திருப்பெயரில் செய்திடவும், இளைஞர் சமுதாயத்திற்காக விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கு கோலப் போட்டிகள் மற்றும் வீர விளையாட்டுகள் பல நடத்திடவும் மேலும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மணமகன், மணமகளை தேர்வு செய்து, அம்மாவின் திருப்பெயரால் இலவச திருமணங்களை நடத்திடவும்,

ஓய்வறியாது, ஊன் உறக்கம் பாராது, தன்னுடைய அயராத உழைப்பால் கழகத்தை கட்டிக் காத்து கழகத்திற்கு உலகப் புகழை பெற்று தந்திட்ட நம் தமிழர் குலச்சாமி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டராக நாம் அனைவரும் நாளும் அயராது சோர்வில்லாமல் உழைத்து, அம்மாவின் புகழ் அகிலமெங்கும், “அழியா புகழாக”, “மங்கா புகழாக” நீடித்து நிலைத்து நிற்க, கழக அம்மாபேரவை உறுதி ஏற்கிறது.

* கருணையின் வடிவான அன்பின் அடையாளம், தமிழர்குலச் சாமி நம் அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு இனி கழகத்தின் நிலை என்ன? என்று வேதனையுடனும், கண்ணீருடனும் கலங்கி நின்ற கோடானுகோடி விசுவாசமிக்க கழகத் தொண்டர்களின் மனக் கவலைகளைத் துடைத்து எறிந்து, கழகத்தையும் அம்மாவின் அரசையும் காப்பாற்றி தந்து, ஆகாயத்தில் ஆசை கோட்டை கட்டிய கழகத்தின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்ற, இன்றைக்கு தங்களுடைய அயராது உழைப்பால், ஈடு இணையற்ற கருணையால், ஆழ்ந்த மதிநுட்பத்தால்,

உறுதியான தொலைநோக்கு சிந்தனையால், கழகத்தை மீட்டெடுத்து, கட்டிக் காத்து, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புனித அரசை உறுதிபட நிலைநாட்டி, பார் போற்றிட வழி நடத்தி, மகத்தான நல்லாட்சியை வழங்கி, இந்திய திருநாட்டில், முதன்மை அரசாக அம்மா அவர்களின் அரசை தலைமை தாங்கி வழி நடத்தி, நீர் மேலாண்மையில் புரட்சிகள் பல படைத்து வருகின்ற புரட்சியாளர், காவிரியை மீட்டு தந்திட்ட வாழும் கரிகால்சோழன், முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், அம்மா அரசின் மூலம் ஜல்லிக் கட்டு உரிமையை பக்குவமாய் மீட்டு

தந்திட்ட மனித நேய பண்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி ஆகியோருக்கும், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் மற்றும் இவர்களோடு உறுதுணையாக களத்திலே நின்று, கழகப் பணியாற்றி வருகின்ற அனைத்து அமைச்சர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்ட கழக செயலாளர்களுக்கும், அம்மா அவர்களின் கோடானுகோடி விசுவாசிகளுக்கும், கழக அம்மா பேரவை தனது நெஞ்சம் நிறைந்த நன்றியினை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

* சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படுவதிலும், ஒரு வல்லரசின் அதிபர் வந்து இரண்டு நாட்கள் தங்கி சாலை வழியாக நெடுந்தொலைவு பயணம் செய்து மன நிறைவுடன் தாயகம் திரும்ப ஏதுவாக இருப்பதிலும், முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான தாய் தமிழ்நாடு சிறப்பான மாநிலமாகத் திகழ்வதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க “சீன அதிபர்-பாரதப் பிரதமர் சந்திப்பு” வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.

ஒரு வல்லரசு நாட்டின் தலைவர், வேறு ஒரு நாட்டிற்கு செல்கையில் அவர் எங்கு தங்க வேண்டும் என்பதையும், அவருக்கு அனைத்து வகையிலும் உகந்த இடமாக எந்த ஊர் இருந்திட முடியும் என்பதையும், அந்த வல்லரசின் மூத்த நிலை ஆட்சியாளர்கள் முடிவு செய்கின்றனர்.

அந்த வகையில், உலகப் பெருந்தலைவர்கள் ஒன்றுகூட சிறந்த இடம் எடப்பாடியார் தலைமையிலான தமிழ்நாடு என்று பெருமிதத்துடன் பறைசாற்றும் வகையில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படுவதிலும், தொன்மைச் சிறப்புகளை எடுத்து இயம்புவதிலும், அன்பான வரவேற்பு, அற்புதமான விருந்தோம்பல் முறைகளிலும் சிறந்து விளங்கும் தாய்தமிழ்நாட்டில் அம்மா அவர்களின் அரசை தலைமையேற்று, பார்புகழ வழிநடத்தி வருகின்ற, சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்து வருகின்ற, முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், அன்னாரது தலைமையில் பணியாற்றி வருகின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் மற்றும் இரவுபகல் பாராது பணியாற்றி வருகின்ற அனைவருக்கும், கழக அம்மாபேரவை கோடானுகோடி நன்றியினை காணிக்கையாக்கி பாராட்டி வாழ்த்தி வணங்குகிறது.

* பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் அயராத முயற்சியால் தான், 1969-ம் ஆண்டு “மெட்ராஸ் ஸ்டேட்” என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப் பெற்றது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட இன்றைக்கு இருக்கும் “தமிழ்நாடு” என்ற மாநிலம் உருவான நாளான நவம்பர் திங்கள் முதல் நாளை “தமிழ்நாடு நாள்” என்று பிரகடனம் செய்து, அந்த நாளினை ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசின் சார்பில் சிறப்புற கொண்டாடிட முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான, அம்மா அவர்களின் அரசு நடவடிக்கை மேற்கொண்டு “தமிழ்நாடு நாளினை” பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் வழியாக சிறப்புற கொண்டாடி தமிழ்நாட்டின் பெருமையை தேசமெங்கும் எடுத்து சென்றிட்ட முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசிற்கும், துணை நின்று வழி நடத்தி வருகின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்களுக்கும் கழக அம்மா பேரவை கோடானு கோடி நன்றியையும், வாழ்த்துக்களையும் வணங்கி தெரிவித்துக் கொள்கிறது.

* ஏழை, எளிய மக்களுக்கும், பெண்களுக்கும், உழைத்துக் களைத்த முதியோர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும், நாம் செய்யும் தொண்டு மகத்தான மனிதநேயமிக்க புனிதப் பணி என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. அவரது வழியில் “முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை” மாநிலம் முழுவதும் செயல்படுத்தி, மேலும் இத்திட்டத்திற்கு உயிர் ஊட்டுகின்ற வகையில், தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை தரப்படவும், முதியோர் உதவித் தொகை பெறுபவர்களின் சொத்து மதிப்பு ரூ.50,000 என்று இருந்த உச்ச வரம்பை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படவும், தாயுள்ளத்தோடு உத்திரவிட்ட ஏழைகளின் காவலர், சாமானிய மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், அவருக்கு துணை நிற்கின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கும், கழக அம்மா பேரவை கோடானுகோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வாழ்த்தி வணங்குகிறது.

காவேரி – கோதாவரி இணைப்புத் திட்டம், காவேரி – அக்னியாறு – தெற்கு வெள்ளாறு – வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டத்தின் 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் மேலும், தமிழ்நாட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையும் கட்டுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, இவற்றோடு மேலும் பல்வேறு இடங்களில் 30 தடுப்பணைகளைக் கட்டி நீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் அளவை உயர்த்தவும், அரிய முயற்சியில் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு ஈடுபட்டிருக்கிறது.

முத்தான பாசனத் திட்டங்களும், பலகோடி மக்களின் வாழ்வை மலரச் செய்ய இருக்கும் மகத்தான மக்கள் நல திட்டங்களும் இவற்றை தொலை நோக்கு சிந்தனையோடு உருவாக்கி, தமிழகத்தின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற ஒப்பற்ற பணிகளை மேற்கொண்டிருக்கும், முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசிற்கும், அவருக்கு துணை நிற்கின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கும், கழக அம்மா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வாழ்த்தி வணங்குகிறது.

* தமிழர்களின் பாரம்பரித்தையும் பண்பாட்டையும் வீரத்தினையும் உலகறியச் செய்திடும் அடையாளமாக திகழ்கின்ற, வரலாற்று சிறப்புமிக்க வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டினை, ஒட்டு மொத்த உலக தமிழ் மக்களும் பெருமை கொள்கின்ற வகையில், அதன் பாரம்பரியம் சிறிதும் மாறாமல், பார் போற்றுகின்ற வகையில், ஊர் போற்றுகின்ற வகையில், உலகம் போற்றுகின்ற வகையில் இந்த ஆண்டும் நடத்திட, உரிய அறிவுரைகள் வழங்கி, ஆலோசனைகள் எடுத்துச் செல்லி, உரிய அரசாணைகள் பிறப்பித்து, தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுத்து, பங்கேற்கும் காளையர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்து, பங்கேற்கும் காளைகளுக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு,

பங்கேற்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் சிறு தூசும் படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் குறைவின்றி நிறைவாக செய்து கொடுத்து உச்சநீதிமன்ற அறிவுரைப்படியும் சிறப்பாக ஜல்லிக்கட்டினை நடத்தி காட்டி, ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயம், விவசாய பெருமக்கள், ஒட்டு மொத்த தமிழக மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்திட்ட, நீர் மேலாண்மையில் புரட்சி செய்திட்ட புரட்சியாளர், அன்னைத் தமிழகத்தை தேசத்தின் முதன்மை இடத்தில் அமர வைத்து அழகு பார்த்திட்ட உலகத் தமிழர்களின் புதிய விடியல், சாமானிய தமிழனாக சரித்திர சாதனை படைத்து வருகின்ற தாய் தமிழ்நாட்டின் தலைமகன்,

குடிமராமத்து திட்டம் தந்து காவேரியை மீட்டுத் தந்திட்ட வாழும் கரிகால் சோழன், எளியவர், தூயவர், பண்பாளர், மனிதநேயம் மிக்கவர், உழைப்பால் உயர்ந்தவர், கருணையின் வடிவானவர், தாயுள்ளம் கொண்டவர், ஆற்றல் அரசர், தொலை நோக்கு பார்வை கொண்ட ஆழ்ந்த மதி நுட்பம் கொண்டவர், நம்மவர் இத்தனையும் தன்னகத்தே கொண்டும், தன்னை ஒரு சாமானியனாக மக்களிடத்திலே தொடர்ந்து எளிமையாக அடையாளப்படுத்தி மக்களின் பாராட்டுதலையும், நம்பிக்கையையும் பெற்று வருகின்ற சேலத்து சிங்கம், கொங்குநாட்டு தங்கம் முதலமைச்சர் எடப்பாடியாருக்கும்,

அம்மா அரசின் மூலம் பறிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு உரிமையினை பக்குவமாய் மீட்டெடுத்து தந்து ஒட்டு மொத்த இளைய சமுதாயம், மாணவ சமுதாயம், தாய்மார்கள் வீரத் தமிழர்களின் குரலை மத்திய அரசிலே எடுத்து வைத்து மாபெரும் வெற்றியை பெற்று தந்து, உலகத் தழிழர்களின் அன்பைப்பெற்ற, அம்மாவின் தூய தொண்டர், அன்பையும், கனிவையும், அடக்கத்தையும் தன் அணிகலானக் கொண்டு, காலமெல்லாம் கழகத்திற்காக உழைத்திட சபதமேற்று பணிபுரிந்து வருகின்ற தங்கத் தமிழ்மகன் விருது பெற்றிருக்கின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கும், கழக அம்மா பேரவை கோடானுகோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வாழ்த்தி வணங்குகிறது.

* சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அளிக்கப்படும் வாக்குறுதிகளை, உறுதியாகவும், உடனுக்குடனும் செயல்படுத்தும், எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிபேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி தந்து, புதிய வரைபடத்தை தாய்திருநாட்டிற்கு உருவாக்கி தந்திட்ட தாய் தமிழ்நாட்டின் தலைமகன் எடப்பாடியாருக்கும், அவரோடு துணை நிற்கின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கும் கோடானு கோடி நன்றியினை காணிக்கையாக்கி வாழ்த்தி வணங்குவதோடு, மதுரையில் “எய்ம்ஸ்” மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றியையும்,

வாழ்த்துக்களையும் வணங்கி தெரிவித்துக் கொண்டு, மேலும் புத்தம் புதிய 9 மருத்துவக் கல்லூரிகளை மாநிலம் முழுவதும் தொடங்குவதோடு, தமிழ்நாட்டில் மருத்துவ சேவைகளையும், மருத்துவ கல்வியையும் மக்களுக்கு வழங்குவதில் பெரும் புரட்சிகளை செய்துவரும் முதலமைச்சர் எடப்பாடியாருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் வணங்கி தெரிவித்துக் கொள்வதோடு, ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய கால்நடைப் பூங்காவினை, சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டுரோட்டில் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கும் அம்மா அவர்களின் அரசை பார் போற்றிட வழி நடத்தும், எடப்பாடியாருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் வணங்கி தெரிவித்துக் கொள்வதோடு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று போற்றப்படும்,

நம் மாநிலத்தில் உயர் கல்வியின் வாய்ப்புகளை அனைவருக்கும் வழங்க பல புதிய கல்லூரிகளை தொடங்கி வரலாற்று சாதனை படைத்திட்ட எடப்பாடியாருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் வணங்கி தெரிவித்துக் கொள்வதோடு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சுமார் 1600 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற பணிகளை விரைந்து மேற்கொண்டிருக்கும்,

முதலமைச்சர் எடப்பாடியாருக்கு நன்றியினையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் வணங்கி தெரிவித்துக் கொள்வதோடு தமிழ்நாட்டை தொழில் வளம்மிக்க மாநிலமாக மாற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியும், உலக நாடுகள் பலவற்றிற்கும் நேரிலே சென்று உலகப் புகழ் பெற்ற முதலீட்டாளர்களையும் தொழில் நிறுவனங்களையும் நேரில் சந்தித்தும், பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு மாபெரும் வெற்றி கண்டிருக்கும், முதலமைச்சர் எடப்பாடியாருக்கும் கழக அம்மா பேரவை கோடானு கோடி நன்றியை காணிக்கையாக்கி வணங்குகிறது.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் உலகத் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஏழை எளிய குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பினை வழங்கி ஒட்டு மொத்த தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திட்ட முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், அவருக்கு துணை நிற்கின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கும், கழக அம்மா பேரவை கோடானுகோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வாழ்த்தி வணங்குகிறது.

* தொடர்ந்து கட்டுக் கதைகளை கட்டவிழ்த்துவிட்டு, இல்லாத ஒன்றை இருப்பது போல் நம்ப வைக்கின்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம், பொய் பிரச்சாரங்களை மூலதனமாகக் கொண்டு தங்களை புனிதர்களாக காட்டிக் கொண்டு, பொது வாழ்வை பயன்படுத்தி, லட்சக்கணக்கான கோடிகளை மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் வழியாக சேகரித்து வைத்திருக்கும், தீய சக்தி திமுகவின் தலைமையும், தலைமையைச் சார்ந்த குடும்பங்களும், குடும்ப உறுப்பினர்களும் மற்றும் திமுக முன்னணியினரும், பாரத ரத்னா புரட்சித் தலைவர் ஆட்சிக்காலம் முதல் இன்றுவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை அசைத்து பார்க்க பல்வேறு குறுக்கு வழிகளில் தொடர்ந்து முயற்சித்தும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து தோல்வியினையே பரிசாக தந்து கொண்டிருக்கின்றார்கள்.

இருந்தும் பொது வாழ்வில் தாங்கள் தொடர்ந்து பெறுகின்ற மரண அடியை மறைக்கவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தவும் பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டுவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது கட்சியினைச் சார்ந்தவர்களும் தமிழர்குலச்சாமி அம்மா அவர்களின் அரசை வீழ்த்திட எடுக்கும் அனைத்து முயற்சிகளும், தோல்வியிலேயே முடிந்து வருகின்றது. இதனால் மீண்டும், மீண்டும் கழகத்தின் மீதும், கழக அரசின் மீதும் அவதூறு பரப்புவதும், பொய் பிரச்சாரங்கள் செய்வதையும் வீண் பழி சுமத்துவதையும் தங்களது கடமையாக கொண்டுள்ளனர்.

பாரத ரத்னா, புரட்சித் தலைவர் காலத்தில் இருந்தது போலவும், தமிழர்குலச் சாமி அம்மா அவர்களின் காலத்தில் இருந்தது போலவும், இன்றைக்கும் முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் அனைவரும் அயராது மக்கள் பணியாற்றி, திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தொடர்ந்து தோல்வியை பரிசாக வழங்கி வருவதால், தங்களுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது கட்சியினரும் உணர்ந்து கொண்டு விட்டனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், வன்முறை கலாச்சாரம், நில அபகரிப்பு, மின்வெட்டு, கட்டப் பஞ்சாயத்து, தமிழ்நாட்டு மக்களின் உடமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை போன்றவை தமிழக மக்களின் நெஞ்சில் பசுமரத்தாணி போல் இன்றைக்கும் பதிந்து இருக்கிறது. பதவி ஆசையை பொதுவாழ்வின் லட்சியமாக கொண்டு, தமிழகத்தை வேட்டை காடாக்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும், தமிழ்நாட்டு அரசின் சாதனைகளை மறைக்க தொடர்ந்து நடத்திவரும் பொய் பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டிடவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்திடவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்பை பெற்ற, மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆயிரம் காலத்து பயிராக இன்னும் பல ஆண்டுகள்,

முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலுடனும், அம்மாவின் அரசு தொடர்ந்து மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டிட எளிய முதலமைச்சராக தமிழகத்திற்கு பல முன்னேற்றங்களை தந்திட்ட எடப்பாடியாரின் தலைமையிலான அம்மா அரசின் வரலாற்று சாதனைகளை பட்டி தொட்டியெங்கும் எடுத்துச் சென்றிட, சாதனை விளக்க பிரச்சார கூட்டங்களை தொடர்ந்து கழக அம்மா பேரவை சார்பில் நடத்திடவும் கழக அம்மா பேரவை தொடர்ந்து ஊன் உறக்கம் இன்றி, இரவு பகல் பாராது சோர்வின்றி அயராது உழைத்திடவும் இக்கூட்டத்தின் வாயிலாக சூளுரை ஏற்கிறது.

* நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் இடைத்தேர்தல்கள் என்பதாலும், நாடாளுமன்ற மக்களைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்கள் என்பதாலும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், எதிர்கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதாலும், தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை இரு வேறு திசைகளில் இருந்து வெளிப்படுத்தும் தொகுதிகள் என்பதாலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அனைவராலும் கூர்ந்து நோக்கப்பட்ட தேர்தல்களாக இருந்தன. அடுத்த சட்டமன்ற பொது தேர்தலுக்கான நுழைவு வாயிலாகவும், முன்னோட்டமாகவும் இந்த இடைத் தேர்தல்கள் கணிக்கப்பட்டிருந்தன.

இந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த வேளையில், கழகம் முதன் முதல் தேர்தல் களம் கண்ட திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 1973-ம் ஆண்டு மே மாதம் 21-ம் நாள் தொடங்கியபோது இருந்த உள்ளத்தின் அதே உணர்வுகளைப் போன்ற மன நிலையோடு கழக உடன்பிறப்புகள் காத்திருந்தனர்.

வெற்றி! வெற்றி ! மகத்தான வெற்றி !என கழக வேட்பாளர் இருவருமே வெற்றியை நோக்கி இருந்தனர். விக்கிரவாண்டியில் 1,13,766 வாக்குகளைப் பெற்று 44,924 வாக்குகள் வித்தியாசத்திலும், நான்குநேரியில் 95,377 வாக்குகளைப் பெற்று, 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும் கழக வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றனர் என்ற முழக்கம், தேனினும் இனிய வெற்றி செய்தியாக எங்கும் எதிரொளித்தது. திண்டுக்கல் இடைத் தேர்தலின் முடிவுகள் தமிழக அரசியலின் போக்கை மாற்றியதைப் போல, விக்கிரவாண்டி, நான்குநேரி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையை அமைத்திருக்கிறது.

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் விழிப்பாய் இருந்து அரசியல் பணியாற்றி, முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு செய்து வரும் மகத்தான மக்கள் நலப் பணிகளை, முத்து முத்தான வளர்ச்சி திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, அம்மாவின் கனவு திட்டங்களை தொடர்ந்து மக்களிடத்திலே எடுத்துக்கூறி, கழகத்தை வெற்றி சிம்மாசனத்திலே அமர்த்தி அழகு பார்த்ததோடு, இனிவரும் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெறவும்,

முதலமைச்சர் எடப்பாடியாரின் தலைமையிலான அம்மா அரசின் சரித்திர சாதனைகளை வீடுவீடாக எடுத்துச் சென்று தொடர் சாதனை விளக்க திண்ணை பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சாதனை விளக்க பேரணிகளை தமிழகமெங்கும் நடத்திகாட்டி, வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் கழகம் மகத்தான வெற்றி பெற்றிட கழக அம்மா பேரவையின் விசுவாசமிக்க தொண்டர்கள் ஊன் உறக்கம் பாராது, இரவுப் பகல் பாராது, சோர்வின்றி களத்திலே அயராது உழைத்து மக்கள் பணியாற்றி “புதிய வெற்றி சரித்திரம்” படைத்திட கழகஅம்மாபேரவை இக்கூட்டத்தின் வாயிலாக சூளுரை ஏற்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.