திருநெல்வேலி

மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாத சூழல் நிலவி வந்தது. இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தே காணப்பட்டது. இருப்பினும் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக குற்றால அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் குற்றாலத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.