தமிழகம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை:-

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றார். கடலோரத்தை ஒட்டி உள்மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடுமென அவர் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று புவியரசன் கூறினார். சென்னை நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென அவர் குறிப்பிட்டார். சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்குமென அவர் கூறினார். சென்னை, புதுச்சேரி, வேலூரில் மட்டுமே மழை பொழிவு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இம்மாதம் இறுதி வரை பருவமழை பொழியும் என்று புவியரசன், அடுத்த 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நல்ல மழை பொழிவு இருக்கும் என்றார்.