இந்தியா மற்றவை

அடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை விண் ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 50-வது திட்டம் வெற்றி பெற்றதை முன்னிட்டு அதுதொடர்பான முழுவிவரங்கள் அடங்கிய ‘பிஎஸ்எல்வி 50’ என்ற சிறப்பு மலரை இஸ்ரோ தலைவர் கே.சிவன் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:

இந்த வெற்றியின் மூலம் விண்வெளித் துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ எட்டி யுள்ளது. ஆரம்ப காலத்தில் பிஎஸ்எல்வி மூலம் அதிகபட்சம் 800 கிலோ வரையான செயற்கைக் கோள்களை மட்டுமே நம்மால் ஏவ முடியும். தற்போது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 26 ஆண்டுகால பயணத்தில் 1.9 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல் லும் அளவுக்கு அதன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெற்றியில் இஸ்ரோவில் பணியாற்றிய ராக்கெட் ஏவுதல் பிரிவு ,ஒட்டுமொத்த பிஎஸ்எல்வி குழுக்களின் தலைவர்கள், உறுப் பினர்கள் என அனைவருக்கும் பங்குள்ளது. மாதவன் நாயர், சீனிவாசன் உள்ளிட்ட இஸ்ரோவின் தலைவர்களாக இருந்த அனைவ ருக்கும் நன்றி. மேலும், ஹரி கோட்டாவில் இருந்து ஏவப்படும் 75-வது ராக்கெட் இது என்பது முக்கிய அம்சம். அதேநேரம் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. நமக்கான பணிகளும் ஏராளமாக உள்ளன.

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் விரைவில் ஏவப்பட உள்ளது. இதுதவிர சிறியரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் உட்பட பல்வேறு திட்டங்கள் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள் ளோம். எதிர்காலத்தில் அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக முடிப்பதற்கான ஆராய்ச்சி பணி களை விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும். பின்னடைவுக்கு இடம் தராமல் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.