தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலையில் கழகம் சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்பு

திருவண்ணாமலை

இந்தித் திணிப்பை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர அஞ்சலி செலுத்தும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் சத்ய சிவகுமார் தலைமை வகித்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு மத்திய அரசு வழங்கிய விருதே சாட்சி என்று தெரிவித்தார். மேலும் முதலமைச்சரின் சீரிய திட்டங்களால் 30 ஆண்டுகால வளர்ச்சியை தமிழகம் 3 ஆண்டுகளில் பெற்றிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் குன்றத்தூர் கோவிந்தராஜ், பாரிஸ் ராஜா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ எஸ்.குணசேகரன், மாவட்ட பாசறை செயலாளர் கஜேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வக்கீல் சங்கர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் துரை, திருவண்ணாமலை நகர கழக செயலாளர் ஜே.எஸ். என்கிற ஜெ.செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அகிலா கோவிந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர்கள் உஷா நாதன், குட்டி கணேசன், சி.பி.முருகன், அம்மா பேரவை இணை செயலாளர் மணிகண்டன், நிலவள வங்கி தலைவர் இளவழகன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஏ.கே.குமாரசாமி, திருநாவுக்கரசு உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.